புத்ரா ஹைட்ஸ் சம்பவத்தில் நான் யாரையும் “பாதுகாக்கவில்லை’!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், ஏப். 6-

புத்ரா ஹைட்ஸ் பகுதியில் எரிவாயுக் குழாய் வெடிப்பு நிகழ்ந்துள்ள இடத்திற்கு அருகில் மண்ணை தோண்டும் நடவடிக்கைகள் எதுவும் நடந்ததில்லை என்று கூறியதன் மூலம், சில மேம்பாட்டாளர்களை பாதுகாக்க தாம் முயல்வதாகக் கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளை, சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி மறுத்துள்ளார்.

வெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதிக்கு முதல் முறையாக வந்திருந்தபோது, அப்பகுதியில் மண்ணை தோண்டும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. கண்டறியப்படவில்லை என்று அமிருடின் அன்றைய தினம் கூறியிருந்தார்.ஆனால், கட்டுமான நடவடிக்கைகளினால் வெடிப்பு ஏற்பட்டிருப்பதை அமிருடின் மறுக்கின்றார் என்று சில தரப்பினர் கூறியிருந்தனர்.

நிலத்திற்குள் ஊடுருவக் கூடிய ராடார் கருவி பயன்படுத்தப்பட்டதன் மூலம், சம்பவம் நிகழ்ந்திருக்கும் இடத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் ஒரு மண்வாரி இயந்திரம் புதைந்திருப்பதை விசாரணையாளர்கள் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கண்டு பிடித்திருப்பதாக, நேற்று சனிக்கிழமை ஷா ஆலமில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அமிருடின் தெரிவித்தார்.

“மண்வாரி இயந்திரங்களும் புல்டோசர்களும் பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து சில தரப்பினர் இன்னமும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குத்தகையாளர்களை பாதுகாப்பதுதான் மந்திரி பெசாரின் பணி என்றும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதில் குற்றமிழைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரும் விசாரிக்கப்படுவார்கள். சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் உசேன் ஒமார் கான் தலைமையிலான விசாரணைக் குழு மீது நான் நம்பிக்கைக் கொண்டுள்ளேன் என்று அமிருடின் தெரிவித்தார்.

வெடிப்பு ஏற்பட்டுள்ள இடத்திலிருந்து முப்பதே மீட்டர் தொலைவில் மண்ணைத் தோண்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததை உசேன் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தி இருந்தார். வெடிப்புச் சம்பவம் நிழ்ந்திருப்பதற்கு அதுவே காரணமா என்பது குறித்து விசாரிக்க போலீசாருக்கு இரண்டு வார காலஅவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஒரு கழிவுக் குழாயை மாற்றுவதற்காக அப்பகுதியில் மண் தோண்டப்பட்டு இருப்பதாகவும் இம்மாத மத்தியில் தொடங்கப்பட்ட அப்பணி, அங்கு வெடிப்பு ஏற்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், அதாவது இம்மாதம் 30ஆம் தேதி முடிவடைந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Menteri Besar Selangor, Amirudin Shari menafikan tuduhan melindungi pemaju berhubung insiden letupan paip gas di Putra Heights. Beliau menegaskan tiada aktiviti korekan tanah dikesan ketika lawatan awal, namun radar mengesan jentera tertimbus. Siasatan lanjut sedang dijalankan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *