ஆதித்ய தாரே எனும் ஐ பி எல் அதிர்ஷ்ட நாயகன்!

top-news
FREE WEBSITE AD

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் பங்கேற்று விளையாடும் உள்ளூர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் பிசிசிஐ அமைப்பு சார்பில் ஐபிஎல் போட்டிகள் கடந்த 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஐபிஎல் தொடரில் விளையாடும் ஏராளமான வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

அந்த வகையில் 2008 முதல் 2024ம் ஆண்டு வரை நடைபெற்றுள்ள அனைத்து தொடர்களிலும், அதிக கோப்பைகள் வென்ற வீரர்கள் என்ற சாதனையை தற்போதைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் விளையாடும் ரோகித் சர்மா மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் 6 கோப்பைகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.

இவர்களுக்கு அடுத்தபடியாக 5 ஐபிஎல் கோப்பை வென்ற அணிகளில் விளையாடிய வீரர்கள் என்ற சாதனையை ஹர்திக் பாண்டியா, மகேந்திர சிங் தோனி மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் படைத்துள்ளனர். இதன் பிறகு உள்ள வீரர்கள் 4 மற்றும் அதற்கு குறைவான முறை மட்டுமே கோப்பை வென்ற அணியில் அங்கம் வகித்துள்ளனர்.

ஆனால் ஐபிஎல் வரலாற்றில் வீரர் ஒருவர் 5 கோப்பைகள் பெற்ற அணியின் ஒரு அங்கமாக இருந்தது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் இந்தியாவைச் சேர்ந்த ரஞ்சிக் கோப்பை வீரரான ஆதித்ய தாரே.

2016ம் ஆண்டு இவர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும், 2017ம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காகவும் விளையாடினார். 2018ம் ஆண்டு மீண்டும் மும்பை அணிக்கு திரும்பிய அவர், தற்போது வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர், 117 போட்டிகளில் விளையாடி 2,361 ரன்கள் குவித்துள்ளார். ஆதித்ய தாரே, 2013ம் ஆண்டு மற்றும் 2015ம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வென்ற போது அந்த அணியில் இருந்தார். 2016ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கோப்பை வென்ற போது அந்த அணியில் அங்கமாக இருந்தார். பின்னர் மீண்டும் மும்பை அணிக்கு திரும்பிய அவர் 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் அந்த அணி கோப்பை வென்ற போது அந்த அணியின் அங்கமாக இருந்தார்.

இதன் மூலம் 5 கோப்பைகள் வென்ற அணியில் அங்கமாக இருந்த வீரர் என்ற சாதனையை ஆதித்ய தாரே படைத்துள்ளார். அது மட்டுமின்றி இதுவரை ஒரு சர்வதேச போட்டிகளில் கூட விளையாடாத ஒரு வீரர், ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகள் வென்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *