சைக்கிளை மோதாமல் தவிர்த்து 3 வாகனங்களை மோதிய மோட்டார் சைக்கிளோட்டி!

- Sangeetha K Loganathan
- 04 Apr, 2025
ஏப்ரல் 4,
பாலத்தின் நடுவே சென்றுக் கொண்டிருந்த சைக்கிளை மோதாமல் தவிர்க்க முயற்சித்த மோட்டார் சைக்கிளோட்டி அருகில் வந்த சுற்றுலா பேருந்தையும் இரு வாகனங்களை மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியிருப்பதாக மத்திய மலாக்கா மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார். காலை 10.20 மணிக்கு விபத்துக் குறித்தானத் தகவல் பொதுமக்கள் மூலமாகப் பெற்றதாக அவர் தெரிவித்தார்.
மலாக்காவில் உள்ள Syed Abdul Aziz பாலத்தில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டியும் அவருடன் பயணித்த மற்றொருவரும் படுகாயம் அடைந்ததாக மத்திய மலாக்கா மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார். மலாக்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரிடமும் சிகிச்சைக்குப் பின்னர் விசாரணை நடத்தப்படும் என்றும் சம்மந்தப்பட்ட சைக்கிளோட்டியைத் தேடி வருவதாகவும் மத்திய மலாக்கா மாவட்டக் காவல் ஆணையர் Christopher Patit தெரிவித்தார்.
Seorang penunggang motosikal cuba mengelak daripada melanggar sebuah basikal di atas jambatan Syed Abdul Aziz, Melaka, lalu melanggar tiga kenderaan lain. Penunggang dan pembonceng mengalami kecederaan parah dan kini menerima rawatan di hospital.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *