பல்லாயிரக்கணக்கான மலேசியர்கள் வேலை இழக்க வேண்டி வரலாம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப். 4-

மலேசியாவின் இறக்குமதிப் பொருட்களுக்கு இருபத்து நான்கு விழுக்காட்டு வரியை விதிக்க அமெரிக்கா செய்துள்ள முடிவினால், பல்லாயிரக்கணக்கான மலேசியத் தொழிலாளர்கள் வேலை இழக்க வேண்டி வரலாம் என்று தொழிலியல் அமைப்பொன்று அச்சம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தகப் போரினால் மலேசியாவுக்கு ஏராளமான முதலீடுகள் கிடைத்தன. புதிய தயாரிப்புத் தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டன என்று தொழிலியல் ஒற்றுமை மற்றும் கற்றல் வள சங்கம் (எல்எல்ஆர்சி) எனும் அமைப்பு சுட்டிக் காட்டியது

இதனால் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. புதிய தொழில்நுட்ப வசதிகளும் மலேசியாவில் அறிமுகம் கண்டன என்று அந்த அமைப்பின் தலைமைச் செயலாளர் என். கோபால் கிஷ்ணம் தெரிவித்தார்.ஆயினும், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பினால் அந்த தயாரிப்புத் தொழிற்சாலைகள் அனைத்தும் மலேசியாவை விட்டு வெளியேற வேண்டிவரும். இதனால், பரவலான வகையில் வேலை இழப்புகள் ஏற்படும். மலேசியாவில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள்
வேலையிலிருந்து நீக்கப்படலாம் என்ற அவர் எச்சரித்தார்.

அந்நிய நேரடி முதலீடுகளை மத்திய அரசாங்கம் அதிகம் நம்பியிருக்கக்கூடாது. அதனைக் குறைத்துக் கொண்டு உள்நாட்டுத் தேவை மீது அது கவனம் செலுத்த வேண்டும். வரி விதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள மலேசிய தயாரிப்புத்துறையிலும் இதர துறைகளிலும் அது முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் உள்நாட்டிலேயே கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று கோபால் கூறினார்.

மலேசியாவுக்கு அமெரிக்கா 24 விழுக்காடு வரி விதித்துள்ள வேளையில், அண்டை நாடுகளான தாய்லாந்துக்கு 24 விழுக்காடும் இந்தோனேசியாவுக்கு 32 விழுக்காடும் புரூணைக்கு 24 விழுக்காடும் பிலிப்பைன்ஸுக்கு 18 விழுக்காடும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

Cukai 24% yang dikenakan oleh Amerika terhadap barangan import Malaysia dijangka menyebabkan ribuan pekerja tempatan kehilangan pekerjaan. LLRC memberi amaran bahawa kilang-kilang yang dibuka hasil pelaburan asing mungkin berpindah. Kerajaan disaran fokus kepada keperluan tempatan dan pelaburan domestik bagi menjana peluang pekerjaan baharu.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *