மன்னித்துக்கொள்ளுங்கள்… ஒன்று சேர ஷவால் காரணமாக இருக்கட்டும்! – மனம் திறந்த சனூசி

top-news


நேற்று நடைபெற்ற கெடா மாநில அளவிலான மடானி ஹரிராயா  கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் கேபினட் அமைச்சர்களிடம் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சானுசி மன்னிப்புக் கோரினார்.

நிகழ்வில் பேசிய சனுசிகெடா மந்திரி பெசாராக இருந்த காலம் முழுவதும்   மற்றவர்களைப் பாதிக்கக்கூடிய தகாத கருத்துக்களை தெரிவித்ததற்காக மன்னிப்பு கோரினார்.

பிழைகள் மற்றும் தவறுகள் தவிர்க்க முடியாதவை. தூய எண்ணம்நேர்மை மற்றும் பொறுப்புணர்வோடு முன்னோக்கிச் செல்வதற்கு, ஒன்று சேர்வதற்கு  இந்த ஷவால்  காரணமாக இருக்கட்டும் என்று அவர் கூறினார்.

அரசியல் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் ஆர்வத்தில் மக்களின் நலன்கள் முன்வர வேண்டும் என்று கூறிய முஹம்மது சனுசிஅனைத்து அரசியல் விவகாரங்களும் அரசியல் அரங்கில் கையாளப்பட வேண்டும் என்று கூறினார்.

மத்திய அரசு எப்போதும் கவனம் செலுத்தும் என்றும்மாநிலத்தை ஓரங்கட்டாமல் இருக்கும் என்றும் தாம் நம்புவதாக குறிப்பிட்ட சனூசி. கெடாவில் குறிப்பாக கிராமப்புறங்களில் வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்தி வரும் பிரதமருக்குப் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் பல கேபினட் அமைச்சர்கள் உட்படசுமார் 15,000 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *