பல ஆண்டுகளுக்குப் பிறகு சிலாங்கூர் மாநில அளவில் குறுக்கோட்டப் போட்டி!

- Muthu Kumar
- 18 Mar, 2025
(டிகே.மூர்த்தி)
கோல சிலாங்கூர், மார்ச் 18-
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் விளையாட்டுத்துறை எதிர்கால வாழ்வின் முக்கிய அங்கம். தங்கள் பிள்ளைகள் கல்வித்துறையில் வெற்றி பெறுவதுடன் உடலுக்கு ஊக்கமும் மனதுக்கு மகிழ்ச்சியும் அளிக்கக்கூடியது விளையாட்டுத்துறையாக இருக்கின்றது. மேலும், விளையாட்டுத் துறையில் ஈடுபடாத பிள்ளைகள் உடல் பருமனானவர்களாக இருக்கின்றனர் என்றும் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியக் குழுத் தலைவர் அன்பழகன் கூறியுள்ளார்.
இந்நிலையில், சிலாங்கூர் மாநில அளவிலான தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் விளையாட்டுத்துறைக்கு பெற்றோர்கள் முழுமையான ஆதரவு வழங்குகின்றனர். இல்லை என்று மறுக்க முடியாது. ஆனால், நடைபெறும் நிகழ்ச்சியில் 99 தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர்களின் பங்களிப்பு மேலும் அதிகரிக்க வேண்டும் என அழுத்தமாகக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
மாணவர் சமுதாயத்தில் கல்வி எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு மாணவர்களின் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் மிக மிக அவசியம். மாநில தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியமும், தலைமையாசிரியர் கழகமும் இதனை நன்றாகவே உணர்ந்துள்ளன. அதன் காரணமாகவே இந்த குறுக்கோட்டப் போட்டி விளையாட்டு பள்ளியளவில் முடிந்துவிடக்கூடாது என்றெண்ணி மாநில அளவில் சென்றடைய வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
பெஸ்தாரி ஜெயா பத்தாங் பெர்சுந்தை தமிழ்ப்பள்ளியின் வளாகத்தை மையமாகக் கொண்டு நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தக் குறுக்கோட்டப் போட்டியில் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு மிகவும் மெத்த மகிழ்ச்சியாகவும் இருந்துள்ளது.பெஸ்தாரி ஜெயா நகரில் அமைந்துள்ள சாலைகளின் மூலம் மாணவர்கள் தங்களின் குறுக்கோட்டப் போட்டியை முன்னெடுத்துள்ளனர். சாலை போக்குவரத்து காவல் துறையினர் மாணவர்களுக்கு நிறைந்த பாதுகாப்பு வழங்கினார் என்பது பாராட்டுக்குரியது என்றார் அன்பழகன்.
இந்த நிகழ்ச்சி குறித்து சொன்னால் மாநில தலைமையாசிரியர் கழகத்தின் தலைவரும், பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியருமான எஸ்.எஸ்.பாண்டியனின் பேராதரவினால் நடந்துள்ளது. அவருக்கு முன்னாள் ஆசிரியர் திருமூர்த்தி பக்கபலமாக இருந்து பணியாற்றினார்.
அதற்கு முத்திரை பதித்தது போல், மாநில தமிழ்ப்பள்ளிகளின் உதவி இயக்குநர் மணிசேகர் ஸ்ரீரங்கன், மணி மன்றத்தின் மக்கள் தொண்டர் திருமூர்த்தி மற்றும் புக்கிட் மெலாவாத்தி சட்டமன்ற நம்பிக்கை கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் தீபன் சுப்பிரமணியம் மற்றும் அனைத்து பெற்றோர்களுக்கும் அன்பழகன் நன்றியினைக் கூறினார்.
Sukan memainkan peranan penting dalam kehidupan pelajar India, meningkatkan kesihatan fizikal dan mental mereka. Ketua Pengurusan Sekolah Tamil Selangor, Anbalagan, menggesa ibu bapa untuk memberi sokongan penuh dalam acara sukan peringkat negeri. Pertandingan merentas desa di Bestari Jaya berjaya dianjurkan dengan sokongan guru, ibu bapa, dan pihak berkuasa tempatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *