5 டன் மானிய விலை பொருள்களைப் பதுக்கிய ஆடவர் கைது!

top-news

மார்ச் 17,

வறுமை இருக்கும் மக்களுக்காக அரசாங்கம் வழங்கும் மானிய விலையிலானப் பொருள்களைப் பதுக்கிய பொருள் கிடங்கின் உரிமையாளரைக் கிளாந்தான் மாநில உள்நாட்டு வர்த்தகம் வாழ்க்கை செலவீனத் துறையினர் கைது செய்தனர். கிளாந்தானில் உள்ள ரந்தாவ் பன்ஜாங்கிலிருந்து பாசீர் பூத்தே செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு பொருள் கிடங்கில் மானிய விலையிலானப் பொருள்களைப் பதுக்கி வைப்பதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட பொருள் கிடங்கைச் சோதனையிட்டதாகக் கிளாந்தான் மாநிலக் KPDN இயக்குநர் Azman Ismail தெரிவித்தார். 

சம்மந்தப்பட்ட கிடங்கிலிருந்து 816 கிலோகிராம் சக்கரை, 1,110 கிலோகிராம் கோதுமை, 445 கிலோ கிராம் சமையல் எண்ணெய் ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக Azman Ismail தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த எடை 5 டன் என்றும் அதன் மொத்த மதிப்பு RM53,000 என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட்ட பொருள் கிடங்கின் உரிமையாளரான உள்ளூர் ஆடவரிடம் பொருள்களைச் சேமித்து வைப்பதற்கான ஆவணங்களும் உரிமங்களும் இல்லை என விசாரணையில் தெரிய வந்ததும் அவரைக் கைது செய்துள்ளதாக Azman Ismail தெரிவித்தார்.

Seorang pemilik gudang di Kelantan ditahan kerana menyimpan 5 tan barangan bersubsidi tanpa dokumen sah. Barangan bernilai RM53,000 termasuk gula, gandum dan minyak masak dirampas oleh KPDN. Tindakan diambil berdasarkan aduan mengenai penyimpanan barang subsidi secara haram.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *