பாகிஸ்தான் ஹாக்கி அணியை மீண்டும் மீட்டெடுப்பேன்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 8-
 ஹாக்கி உலகின் பெரும் வல்லரசுகளில் ஒன்றாக இருக்கும் பாகிஸ்தானின் நிலையை மீட்டெடுக்கும் முயற்சியில், பாகிஸ்தானின் இளம் வீரர் ஹன்னான் ஷாஹித் மிகவும் கடுமையாகப் பயிற்சி எடுத்து வருகிறார்.
18 வயதான அவர், பாகிஸ்தான் அணியின் மூத்த, சிறந்த ஸ்டிரைக்கர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.
ஓமானின் சலாலா அருகே நடைபெற்ற  2023 ஆசிய யூத் கோப்பையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் வழி, அவர் பல வீரர்களிடமிருந்து பாராட்டினைப் பெற்றார். 
இந்நிலையில், சக வீரர்களின் உதவி இல்லாமல் இந்த இடத்தை அடைந்திருக்க முடியாது என்று ஹன்னா கூறினார்.
சக விளையாட்டாளர்களின் ஒற்றுமையும் கடின உழைப்பும் குழுவின் வெற்றியை நிர்ணயித்துள்ளது. பல அனுபவமிக்க வீரர்கள்  இருப்பதினால், பல நேரங்களில் புதிய உத்தியைக் கற்று கொள்வதுடன் சரியான வழிகாட்டலும் கிடைக்கின்றது என்றார்.
இம்முறை சுல்தான் அஸ்லான் ஷா கோப்பையிலும் விளையாடிய ஹன்னான், எதிரணியின் பார்வை முழுவதும் என்னிடம் மட்டுமே இருந்தது. நான் அவர்களைக் கையாளும் பொழுது மற்ற சக வீரர்களும் அதற்கு ஈடு கொடுத்து, சிறந்த முறையில் விளையாடினர். இதுபோல் சிறந்த முறையில் விளையாடி வந்தால் நிச்சயம் பாகிஸ்தான் ஹாக்கி அணியை மீண்டும் மீட்டெடுப்பேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *