பரதன் கிண்ண இறுதி ஆட்டம்-திரெங்கானு, நெகிரி செம்பிலான் அணிகள் மோதல்!

- Muthu Kumar
- 23 Jan, 2025
கோலாலம்பூர்,ஜன.23-
2025ஆம் ஆண்டுக்கான 84ஆவது பரதன் கிண்ண கால்பந்து போட்டி அதன் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
மலேசிய கால்பந்து சங்கம், எம்ஐஎஸ்சி ஏற்பாட்டில் பரதன் கிண்ணத்தின் இறுதிச் சுற்று வரும் வெள்ளிக்கிழமை சிலாங்கூர் செலாயாங் நகராண்மைக் கழக மைதானத்தில் நடைபெறுகிறது.
இரவு 8.00 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் திரெங்கானு அணி நெகிரி செம்பிலான் அணியுடன் மோதுகிறது முதல் முறையாக இதில் களமிறங்கிய திரெங்கானு இறுத் ஆட்டம் வரை முன்னேறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக அரையிறுதியாட்டத்தில் மலாக்காவை 6-0 என போராடி, பல்வேறு சவால்களை கடந்து திரெங்கானுவில் இந்திய கால்பந்து அணியை உருவாக்கி பரதன் கிண்ணத்தை தட்டிச்செல்ல பெரிதும் பயிற்சி பெற்று வருவதாக அக்குழுவின் பயிற்றுநர் குகனேஸ்வரன் லோகநாதன் கூறினார்.
இதனிடையே நெகிரி செம்பிலான் கடும் போராட்டத்திற்கு பின்னர் இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது.84 ஆண்டுகால வரலாற்றில் நெகிரி செம்பிலான் 7 முறை அக்கிண்ணத்தை கைப்பற்றி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாட்டத்தை அனைவரும் காண வருமாறு ஏற்பாட்டுக்குழு கேட்டுக்கொண்டது. திரெங்கானு நெகிரி செம்பிலான் இடையிலான ஆட்டம் கடுமையானதாக விளங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *