புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து நிகழ்ந்த இடத்திற்கு பேரரசர் வருகை!

- Shan Siva
- 05 Apr, 2025
கோலாலம்பூர், ஏப்ரல் 5: சுபாங் ஜெயாவில் உள்ள புத்ரா ஹைட்ஸில் எரிவாயு
குழாய் தீ விபத்து ஏற்பட்ட இடத்தை மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான்
இப்ராஹிம் இன்று பார்வையிட்டார்.
காலை 9.40
மணியளவில் வருகை புரிந்த அவரை, சிலாங்கூர்
ராஜா மூடா தெங்கு அமீர் ஷா சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா
மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி ஆகியோர் வரவேற்றனர்.
மேலும், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை
அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு, அரசின் தலைமைச்
செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கார், தேசிய காவல்துறை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின்
பிச்சை மற்றும் பெட்ரோனாஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி டான்ஸ்ரீ தெங்கு
முஹம்மது தௌபிக் தெங்கு அஜீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சம்பவம் குறித்த
விளக்கத்தைப் பெறுவதில் பேரரசர் சுபாங் ஜெயா நகர சபையின் (MBSJ) வாகனத்தில் சவாரி செய்து, இடத்தை ஆய்வு செய்தார்.
சுல்தான்
இப்ராஹிம் சம்பவ இடத்தில் சுமார் 40 நிமிடங்கள் பார்வையிட்டு, நிலைமைகளைக் கேட்டறிந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) காலை 8.10 மணிக்கு
பெட்ரோனாஸ் எரிவாயு குழாயில் ஏற்பட்ட தீ விபத்தில், 30 மீட்டர் உயரத்திற்கு மேல் தீப்பிழம்புகள் உயர்ந்து,
வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியஸை எட்டியது,
மேலும் முழுமையாக அணைக்க கிட்டத்தட்ட எட்டு மணி
நேரம் ஆனது.
300க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து இரண்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்!
Yang di-Pertuan Agong Sultan Ibrahim melawat tapak kebakaran paip gas di Putra Heights, Subang Jaya. Kebakaran besar itu menyebabkan 87 rumah musnah sepenuhnya dan 300 penduduk dipindahkan. Baginda diberi taklimat oleh pihak berkuasa tempatan dan meluangkan 40 minit meninjau keadaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *