சில நாய்களை இறக்குமதி செய்ய கடும் விதிமுறைகள் உள்ளன!

- Muthu Kumar
- 04 Apr, 2025
கோலாலம்பூர், . 4-
குறிப்பிட்ட சில இனங்களைச் சேர்ந்த நாய்களை இறக்குமதி செய்ய கடுமையான விதிமுறைகள் நடப்பில் உள்ளன என்று விலங்கியல் சேவைத்துறையின் விதிமுறை களின்படி, மலேசிய நோய்த்தடுப்பு மற்றும் பரிசோதனைச் சேவைத் துறையிடமிருந்து (மாகிஸ்) முறையான இறக்குமதி அனுமதியைப் பெற்றிருந்தால் மட்டுமே அந்நாய்களை இறக்குமதி செய்ய முடியும்.
அகிதா, அமெரிக்கன் புல்டோக், டோகோ அர்ஜெண்டினோ, ஃபிலா பிராசிலிரோ, ஜப்பானிஸ் டோசா, நியாபாலிட்டன் மாஸ்டிஃப் மற்றும் பிட் புல் டேரியர் உட்பட பல நாய் இனங்களை இறக்குமதி செய்ய தடை உள்ளது. அதே நேரத்தில், புல் மாஸ்டிப்ஃப், புல் டேரியர், டோபர்மன், ஜெர்மன் ஷெப்பர்ட், ரோட்வீலர் போன்ற நாய்களை கடுமையான விதிமுறைகளுக்கு உட்பட்டே இறக்குமதி செய்ய முடியும்.
பலத்த கட்டுப்பாடுகளைக் கொண்ட அந்த நாய் இனங்களை இறக்குமதி செய்வதற்கு மாகிஸ்துறையின் தலைமை இயக்குநரிடமிருந்து எழுத்துப்பூர்வமான ஒப்புதலைப் பெற வேண்டியது அவசியமாகும். கெடாவின் கோல கெட்டில். தாமான் டேசா பிடாராவில் இம்மாதம் முதல் தேதியன்று ஐந்து நபர்களை இரண்டு ரோட்வீலர் நாய்கள் கடித்துக் குதறியதில் அவர்கள் பலத்த காயங்களுக்கு ஆளாகினர். அதனைத் தொடர்ந்து, அவ்விரு நாய்களின் உயிரும் போக்கப்பட்டன என்று கெடா விலங்கியல் சேவைத்துறையின் இயக்குநர் டாக்டர் ஷஹாருல் அமார் தாலிப் அறிவித்துள்ளார்.
குடியிருப்புப் பகுதிகளில் மூர்க்கத்தனமான நாய்களை வளர்ப்பதற்குத் தடை விதிக்க வகை செய்யும் புதிய விதிமுறைகளை கெடா அரசாங்கம் இயற்றி வருவதாகக் கூறப்படுகிறது.
Beberapa baka anjing seperti Pit Bull dan Akita diharamkan untuk diimport ke Malaysia tanpa kelulusan khas daripada Maqis. Baka lain seperti Rottweiler dan Doberman pula tertakluk kepada syarat ketat. Insiden serangan Rottweiler di Kedah cetuskan cadangan undang-undang baharu kawal anjing ganas di kawasan kediaman.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *