லிஸ்பனில் நடந்த சர்வதேச நட்பு போட்டியில் குரோஷிய அணி வெற்றி!
- Muthu Kumar
- 10 Jun, 2024
நட்பு கால்பந்து போட்டியில் அசத்திய குரோஷிய அணி, போர்சுகலை 2-1 என வீழ்த்தியது.
'யூரோ' கோப்பை கால்பந்து தொடர் வரும் 14ல் ஜெர்மனியில் துவங்குகிறது. இதற்கு தயாராகும் விதமாக லிஸ்பனில் நடந்த சர்வதேச நட்பு போட்டியில் போர்ச்சுகல், குரோஷிய அணிகள் மோதின.
போர்ச்சுகல் அணியில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பயிற்சியாளர் ராபர்ட்டோ மார்டினிஸ் ரெஸ்ட் கொடுத்து தவறு செய்தார்
சமீபத்தில் சவுதி அரேபியாவின் அல்-நாசர் கிளப் அணிக்காக விளையாடிய ரொனால்டோ, மீண்டும் போர்ச்சுகல் அணியில் இணைந்தார். 2016ல் 'யூரோ' கோப்பை வெல்ல உதவிய இவர், சர்வதேச போட்டிகளில் அதிக கோல் (128 கோல், 204 போட்டி) அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர், இல்லாமல் போர்ச்சுகல் அணி திணறியது.
ஆட்டத்தின் 8வது நிமிடத்தில் 'பெனால்டி ஏரியாவில்' வைத்து குரோஷியாவின் கோவாசிச்சை முரட்டுத்தனமாக மடக்கினார் போர்ச்சுகல் வீரர் விதின்ஹா. இதற்கு வழங்கப்பட்ட 'பெனால்டி' வாய்ப்பில் குரோஷியாவின் லுாகா மோட்ரிச் முதல் கோல் அடித்தார். 48வது நிமிடத்தில் போர்ச்சுகலின் டியாகோ ஜோட்டா பதிலடி கொடுத்தார்.
பின் 56வது நிமிடத்தில் அன்டி புடிமிர், ஒரு கோல் அடிக்க, குரோஷிய அணி 2-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து போர்ச்சுகல் போராடிய போதும் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் குரோஷிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *