எரிவாயு குழாய் விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 50 கார்களை செரி நிறுவனம் வழங்கும்!

- Muthu Kumar
- 03 Apr, 2025
(நமது நிருபர்)
சுபாங் ஜெயா, ஏப்.3-
புத்ரா ஹைட்சின் எரிவாயுக் குழாய் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு ஒரு மாதத்திற்கு 50 கார்களை செரி நிறுவனம் ஏற்பாடு செய்யும் என சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸி ஹான் தெரிவித்தார். தீயின் கடுமையான வெப்ப அளவினால் பாதிக்கப்பட்டவர்களின் வாகனங்கள் சேதமடைந்ததால் அவர்கள் அனுபவித்தத் துன்பங்களைத் தொடர்ந்து இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 மாதத்திற்குத் தேவைப்படும் கார்களை வழங்க செரி மலேசியா,நேற்று காலை ஒப்புக் கொண்டது.முதலில் வருபவருக்கே முன்னுரிமை அடிப்படையில் இது வழங்கப்படும் என்றும் தனது அலுவலகம் அல்லது கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் அலுவலகம் மூலம் இதற்கான விண்ணப்பங்களைச் செய்யலாம் என்று இங் ஸி ஹான் தெரிவித்தார்.
உண்மையில் தேவைப்படுபவர்களுக்கே வழங்கப்படும் என்ற அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விரைவாக அந்த வாகனம் ஒப்படைக்கப்படும் என்பதோடு இந்த கார்களின் மொத்த மதிப்பு வெ.500,000 ஆகும் என அவர் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் புத்ரா ஹைட்சில் எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து அந்த வட்டாரத்திலுள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன. அவற்றில் 60 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்தன. இதுதவிர புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் 10 கடைகளும் பாதிக்கப்பட்டன. அந்த தீ விபத்தினால் 148 கார்கள் மற்றும் 11 மோட்டார் சைக்கிள்களும் பாதிக்கப்பட்டன.
Syarikat Seri Malaysia menyediakan 50 kereta selama sebulan bagi membantu mangsa letupan paip gas di Putra Heights, kata Ing Si Han. Permohonan dibuat melalui pejabatnya atau ADUN Kota Kemuning. Letupan itu merosakkan lebih 300 rumah, 148 kereta, dan 11 motosikal.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *