இந்தியர்களை இழிவுப்படுத்தாதீர்! ஒற்றுமை துறை அமைச்சர் எச்சரிக்கை!

- Sangeetha K Loganathan
- 02 Apr, 2025
ஏப்ரல் 2,
இந்தியர்களை இழிவான வார்த்தைகளால் வசைப்பாடும் வகையில் X வலைத்தலத்தில் பதிவு செய்திருந்த ஆடவருக்கு எதிராகக் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கையை எடுக்கும்படி ஒற்றுமை துறை அமைச்சர் Datuk Aaron Ago Dagang வலியுறுத்தினார். சம்மந்தப்பட்ட X பதிவு தொடர்பாக மலேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC நடவடிக்கை எடுக்கும்படி தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் Datuk Aaron Ago Dagang தெரிவித்தார்.
Amir Ridhwann எனும் X வலைத்தலவாசி எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் மலேசிய இந்தியர்கள் மீது மே 13 நடந்த இனக்கலவரம் போன்று மீண்டும் நடத்த வேண்டும் என்றும் இந்தியர்களை இழிவாகக் குறிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பதும் கண்டிக்கத்தக்க செயல் மட்டுமின்றி கடுமையான நடவடிக்கைக்குரியது என்று ஒற்றுமை துறை அமைச்சர் Datuk Aaron Ago Dagang தெரிவித்தார். சம்மந்தப்பட்ட்ட பதிவு அழிக்கப்பட்டிருந்தாலும் அவர் மீதான நடவடிக்கை அமைச்சு மேற்கொள்ளும் என்றும் தனிப்பட்ட விரோதங்களுக்காக இது போன்ற இனவெறி தாக்குதலை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளைப் பதிவிடுவதை நிறுத்தும்படியும் ஒற்றுமை துறை அமைச்சர் Datuk Aaron Ago Dagang எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Menteri Perpaduan, Datuk Aaron Ago Dagang menggesa tindakan tegas terhadap seorang pengguna X Amir Ridhwann yang memuat naik kenyataan menghina masyarakat India dan merujuk kepada rusuhan 13 Mei. Beliau telah mengarahkan MCMC untuk menyiasat perkara itu walaupun hantaran tersebut telah dipadam. Menteri turut memberi amaran agar tidak membuat kenyataan berunsur perkauman yang boleh menimbulkan ketegangan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *