இது கடைசி நாளல்ல வாக்குமூலம் அளிக்க இஸ்மாயில் சப்ரி மீண்டும் அழைக்கப்படலாம்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மார்ச் 18 -

நாட்டின் ஒன்பதாவது பிரதமராக டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பதவி வகித்த காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் கொள்முதல் தொடர்பிலான விசாரணையில், ஆவணங்கள் மீது மலேசிய லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) நேற்று கவனம் செலுத்தியது.

நான்காவது தடவையாக வாக்குமூலம் அளிக்க இஸ்மாயில் சப்ரி நேற்று புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகம் வந்தபோது அவரிடமிருந்து அவ்வாணையம் அந்த ஆவணங்களை குறிவைத்து வாக்குமூலத்தைப் பதிவு செய்ததாகக் கூறப்பட்டது.வாக்குமூலத்தை அளிப்பதற்காக, பெரா நாடாளுமன்ற உறுப்பினரான இஸ்மாயில் சப்ரி நேற்று திங்கள்கிழமை சுமார் ஆறு மணி நேரம் எம்ஏசிசி தலைமையகத்தில் செலவிட்டார்.

இஸ்மாயில் சப்ரியினால் அண்மையில் பிரகடனம் செய்யப்பட்டிருந்த சொத்து விவரங்களை விசாரணையாளர்கள் ஆராய்ந்த மூன்று நாட்களுக்குப் பின்னர், அவரிடம் மீண்டும் மீண்டும் வாக்கு மூலங்களைப் பெறுவது தொடரப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.வாக்குமூலம் அளிப்பதற்காக வருமாறு இஸ்மாயில் சப்ரி நேற்று அழைக்கப்பட்டது இறுதியானதாக இருக்காது என்றும் அண்மையில் அவர் பிரகடனம் செய்த சில சொத்து விவரங்கள் குறித்து மேல் விளக்கங்களை அளிக்க வருமாறு இன்னமும் அவர் அழைக்கப்படுவார் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.

“திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டதில் அவர் சம்பந்தப்பட்டுள்ளது உட்பட, பல விவகாரங்கள் குறித்த அவரின் வாக்குமூலங்கள் விசாரணையாளர்களுக்குத் தேவைப்படுகின்றன. "பல்வேறு ஆவணங்கள் இன்னமும் விசாரணையின் கீழ் உள்ளன.

எதிர்காலத்தில் அவரிடமிருந்து மேலும் கூடுதலாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படலாம் என்றும் அவ்வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.கள்ளப் பணப் பரிமாற்றம் மற்றும் லஞ்ச ஊழல் சம்பவத்திற்கு எதிரான விசாரணையில், இஸ்மாயில் சப்ரியின் சொத்து தொடர்பிலானவை உட்பட நூற்றுக் கணக்கான முக்கிய ஆவணங்களை எம்ஏசிசி ஆராய்ந்து வருவதாக அண்மையில் கூறப்பட்டிருந்தது.

இஸ்மாயில் சப்ரி கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி அறிவித்திருந்த சொத்து விவரங்கள் தொடர்பிலான ஆவணங்களும் அவற்றில் அடங்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.அந்த ஆவணங்களை பரிசோதிக்க அதிக நாட்களை எம்ஏசிசி எடுத்துக் கொள்வதற்கு, மொத்தம் 17 கோடியே 70 லட்சம் வெள்ளி ரொக்கம் மற்றும் தங்கக் கட்டிகள் கண்டெடுக்கப்பட்டிருப்பதும் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

Bekas Perdana Menteri, Datuk Seri Ismail Sabri Yaakob, memberi keterangan kali keempat di ibu pejabat SPRM berhubung siasatan projek dan perolehan semasa pentadbirannya. SPRM meneliti dokumen berkaitan harta yang diisytiharkan oleh beliau, termasuk wang tunai dan jongkong emas bernilai RM177 juta, dan mungkin siasatan ini dilanjutkan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *