சைக்கிளைத் தவிர்த்த விரைவு பேருந்து உட்பட 3 வாகனங்கள் விபத்துக்குள்ளாகின!

top-news
FREE WEBSITE AD

மலாக்கா, ஏப்.5-

ஒரு சைக்கிளைத் தவிர்க்க முயன்றதில் யமாஹா ஒய்15இஸட்ஆர் ரக மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் சைட் அப்துல் அஜிஸ் பாலத்தின் மீது காரால் மோதப்பட்டு காயமுற்றனர்.இந்த சம்பவம் நேற்று அதிகாலை 1.20 மணிக்கு நிகழ்ந்த 3 வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தாகும் என்று மலாக்கா தெங்ஙா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிறிஸ்தபர் பாதிட் தெரிவித்தார்.

இதுகுறித்து மேற்கொண்ட தொடக்ககட்ட விசாரணைப்படி அப்பாலத்தில் வந்த மோட்டார் சைக்கிள் அதிலேயே வந்து கொண்டிருந்த சைக்கிளைத் தவிர்க்க முற்பட்ட போது இச்சம்பவம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

இருந்த போதிலும் தவிர்க்கும் போது அதே திசையில் பின்புறத்தில் இருந்த தொயோத்தா எஸ்திமா எம்பிவி ரக வாகனம் தவிர்க்க முடியாத காரணத்தால் அந்த மோட்டார் சைக்கிளை மோதி விட்டது.அவ்விபத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் விரைவுப் பேருந்து ஒன்று அந்த எம்பிவி வாகனத்தின் பின்புறத்தில் மோதி விட்டது.

இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் பின்புறத்தில் அமர்ந்திருந்தவரும் காயமுற்றதில் சிகிச்சை பெற மலாக்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக ஓர் அறிக்கையில் ஏசிபி கிறிஸ்தபர் பாதிட் குறிப்பிட்டார்.

Di Melaka, seorang penunggang dan pembonceng motosikal Yamaha Y15ZR cedera selepas dilanggar MPV Toyota Estima ketika cuba mengelak sebuah basikal. Sebuah bas ekspres turut merempuh MPV tersebut. Kemalangan melibatkan tiga kenderaan berlaku jam 1.20 pagi dan mangsa dirawat di Hospital Melaka.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *