அதிக எதிர்பார்ப்பில் வரும் மாதங்களில் ரிலீஸ் ஆக இருக்கும் படங்கள்!

- Muthu Kumar
- 12 Mar, 2025
2025 தொடங்கி இந்த மூன்று மாதங்களில் பெரிய பட்ஜெட் படங்கள், லோ பட்ஜெட் படங்கள் என வர வர ரிலீஸ் ஆகி கொண்டிருக்கின்றன.
குட் பேட் அக்லி: மங்காத்தாவுக்கு பிறகு நடிகர் அஜித்குமாருக்கு முழு நீள மாஸ் படமாக ரிலீஸ் ஆக இருப்பது குட் பேட் அக்லி.அஜித்தின் தீவிர ரசிகர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படம் ஏற்கனவே டிரைலர் மூலம் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டது ஏப்ரல் பத்தாம் தேதி இந்த படம் பண்ண போகும் சம்பவத்திற்காக அஜித் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
பராசக்தி: இந்தி திணிப்புக்கு எதிராக போராடிய மாணவரின் வாழ்க்கை வரலாற்றை சுதா தொங்கரா பராசக்தி படமாக உருவாக்கி இருக்கிறார்.சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படம் சுதந்திர தினத்தன்று ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்பிருக்கிறது.
தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பி இருக்கும் சமயத்தில் இந்த படம் ரிலீஸ் ஆவது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
ரெட்ரோ: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த கொண்டிருக்கும் ரெட்ரோ படம் அவருடைய ரசிகர்களின் பெரிய கனவு படம் என்றே சொல்லலாம்.
தொடர் தோல்விகளால் துவண்டு வரும் சூர்யா இந்த படத்தின் மூலம் மீண்டும் எந்த இடத்தை பிடிப்பார் என சொல்லப்படுகிறது. இந்த படம் வரும் மே மாதம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.
வீர தீர சூரன்: சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம் வீர தீர சூரன். ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் இந்த படத்தின் பாடல்கள் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.விக்ரமுக்கு இந்த படம் பெரிய ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
தக் லைஃப்: 35 வருடங்களுக்குப் பின் மணிரத்னம் மற்றும் கமலஹாசன் இணையும் படம் என்பதால் ஏற்கனவே தக் லைஃப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் சிம்பு இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதால் அவருடைய ரசிகர்களாலும் அதிக கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் க்கு தயாராகி வருகிறது
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *