மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடங்கியதால் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா?

- Muthu Kumar
- 20 Jul, 2024
இன்னும் ஒருவாரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், மைக்ரோசாஃப்ட் மென்பொருள் முடங்கியதால், திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள், மைரோசாஃப்ட் மென்பொருள் முடங்கியதால், தங்கள் தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகளில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக பாரீஸ் வரும் சிலர், அதாவது, விளையாட்டு வீரர்களுடன் வருவோர் போன்றவர்கள், தங்கள் badgeகளை ஒலிம்பிக் போட்டிகள் துவங்குவதற்கு முன் பெறுவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக பாரீஸ் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள், இருந்தாலும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையில் எந்த பாதிப்பும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், ஒலிம்பிக் தீபம் ஏந்திச் செல்லும் ஓட்டம் திட்டமிட்டபடி தொடரும் என்றும், முக்கிய தகவல்களை அணுகுவதில் பாதுகாப்பு தொடர்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார் பாரீஸ் ஒலிம்பிக் திட்டமிடல் குழுவின் தலைவரான Tony Estanguet.
அதே நேரத்தில், புதிய விளையாட்டு வீரர்களை வரவேற்பதிலும், விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுடன் வருவோரை வரவேற்பதிலும், சீருடைகள் மற்றும் அங்கீகாரம் வழங்குவதிலும் உருவாகியுள்ள பிரச்சினைகளால் தங்கள் செயல்முறைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், அதை தற்போது சமாளித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *