ஜசெக தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவையில் மாற்றமா? கேள்வியை தவிர்த்தார் அன்வார்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, மார்ச் 18-

ஜசெக மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த பின்னர், அக்கட்சியில் ஏற்பட்டுள்ள சிறு மாற்றத்தைத் தொடர்ந்து, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிப்பதை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தவிர்த்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ஜசெக கட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளவர்களுக்கு வாழ்த்துகள் என்று மட்டும் சுருக்கமாக பதிலளித்தார்.

"வாழ்த்துகள், தயவு செய்து தொடர்ந்து
பணியாற்றுங்கள்" என்று, புத்ராஜெயாவில் உள்ள உயர் கல்வி அமைச்சில் நேற்று திங்கள்கிழமை நடந்த ஒரு ரமடான் நிகழ்ச்சியின்போது செய்தியாளர்கள் தம்மை சந்தித்தபோது அன்வார் மிகச் சுருக்கமாக இவ்வாறு பதிலளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார்.

Perdana Menteri Anwar Ibrahim mengelak menjawab soalan mengenai kemungkinan rombakan kabinet selepas pemilihan kepimpinan pusat PKR. Ketika ditemui media dalam acara Ramadan di Putrajaya, beliau hanya mengucapkan tahniah kepada pemenang dan meminta mereka terus berkhidmat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *