மின்னல் எஃப்எம் பண்பலைக்கு 79 ஆண்டுகள் நிறைவு!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

கோலாலம்பூர், ஏப்.2-

நேயர்களின் செவிக்கும் மனதுக்கும் இதமளிக்கும் வகையில் 24 மணி நேரமும் காற்றலையில் தவழ்ந்து வந்து பலரையும் மதுர கானங்களால் தாலாட்டிக் கொண்டிருக்கும் மின்னல் எஃப்எம் பண்பலைக்கு நேற்றோடு (1.4.2025) 79 ஆண்டுகள் நிறைவு பெற்று 80 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.

இரவு பகல் பாராது எந்நேரமும் காற்றோடு கலந்து நேயர்களுக்கு ஒலியேற்றி வரும் மொழி, கலை, பண்பாட்டு க் கூறுகளுடன் கல்வி, வர்த்தகம், வானொலி நாடகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட தகவல் தொடர்புடைய மின்னல் பண்பலை வானொலி சேவை பாராட்டுக்குரியது. அன்று ரங்காயான் மேரா, வானொலி 6 என்ற பெயர்களில் உலா வந்தாலும் இன்றைய மின்னல் பண்பலை வானொலி எனும் பெயர் இளைய தலைமுறை நேயர்கள் நெஞ்சங்களில் நிலை பெற்றுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

அன்று ஆங்கிலேயர் ஆட்சியில் நாடு இருந்த வேளையில் 1946 இல் இதே நாளில் தொடங்கப்பட்டு மலாயா வானொலியாக இருந்து பின்னர் கால மாற்றத்தினால் அதன் பெயர்கள் மாறி அறிவியல் உலகில் மின்னல் பண்பலையாக தற்போது பயணித்து வருகிறது. இதன் வளர்ச்சிக்கு பாடுபட்ட பலர் இன்று நம்மோடு இல்லை.அவர்களை நாம் நினைவு கூர்வோம்.

அரசு சார்ந்த தகவல்களை உடனுக்குடன் அறிவிப்பது, தமிழ்ப் பள்ளி, இடைநிலைப் பள்ளி மாணவர்கள் கல்வி மேம்பாட்டிற்கு துணை நிற்பது. பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் நிபுணர்களை நேர்காணல் செய்து அவர் தம் கருத்துகளை நேயர்களுக்குத் தெரிவிப்பது. இசை, கலைத் துறைகளில் தொடர்புடைய உள்ளூர், வெளியூர் கலைஞர்களை அறிமுகம் செய்து வைப்பது, இரவு நேரங்களில் பழம் பாடல்களை ஒலிபரப்பி முதிய வயதினரை மகிழ்விப்பது என பல கூறுகளை உள்ளடக்கி மின்னல் பண்பலை இடை விடாது பயணித்து வருவது மனநிறைவை அளிக்கிறது. ஞாயிறு தோறும் காலையில் ஒலியேறி வரும் அமுதே தமிழே இலக்கிய அங்கம் இலக்கியவாதிகள் கேட்டு மகிழும் அங்கமாக இடம் பெற்று வருகிறது.

இதைத் திறம்படப் படைத்து வரும் இளம்
அறிவிப்பாளர் புவனா வீரமோகனுக்கு பாராட்டுகள். அதே வேளையில், மின்னல் பண்பலை வானொலியில் இளம் அறிவிப்பாளர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் திரேசா லசாரு. நளினி அச்சுதன், சுகன்யா சதாசிவம். அஷ்வினி மோகன், ராவின், தெய்வீகன் தாமரைச் செல்வன் ஆகியோரின் அளப்பரிய சேவை தொடர தமிழ் மலர் வாழ்த்துகிறது.

Minnal FM, saluran radio Tamil Malaysia, meraikan ulang tahun ke-79 pada 1 April 2025. Bermula sebagai Malaya Broadcasting pada 1946, ia kini terkenal dengan kandungan muzik, budaya, dan pendidikan. Penyampai seperti Buvana Veeramohan serta pasukan muda terus menyumbang kepada kejayaannya.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *