புத்ரா ஹைட்ஸ் எரிவாயுக் குழாய் வெடித்த இடத்தை கின்றாரா சட்டமன்ற உறுப்பினர் பார்வையிட்டார்!

- Muthu Kumar
- 03 Apr, 2025
(இரா.கோபி)
சுபாங் ஜெயா, ஏப். 3-
கின்றாரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸே கான் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகக் கூறினார். இதனிடையே 50 வாகனங்களை பாதிக்கப்பட்ட மக்களின் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு வழங்கியதாக அவர் சொன்னார்.
இதனிடையே நேற்று செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஏ.ஏ.அன்பழகன், காவல் நிலையத்தில் இருந்து பாதிக்கப்பட்ட இடத்திற்கு கடமைக்கு வந்தவர்களின் சேவைகளைக் கண்காணித்து விட்டு ஆலயத்தில் தங்கியிருந்த பொதுமக்களிடம் தனது வருத்தத்தைக் தெரிவித்துக் கொண்டார்.
புத்ரா ஹைட்ஸ், ஜாலான் புத்ரா ஹார்மொனியில் எரிவாயு குழாய் வெடித்த
சம்பவம் நிலநடுக்கம் நிகழ்ந்தது போன்று பலத்தை அதிர்வுகளை ஏற்படுத்தியது. நேற்று முன் தினம் காலை 7.50 மணியளவில் ஏற்பட்ட இந்த எரிவாயு குழாய் வெடிப்பு மாலை 3,45 மணியளவில் அணைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வீடுகளில் மணலும் தூசியும் மழைபோல் கொட்டியது என்று பூச்சோங் பெர்டானாவில் பாதிக்கப்பட்ட விவேகானந்தன் தெரிவித்தார்.சம்பந்தப்பட்ட பகுதியில் மட்டுமல்லாது சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் வரை மணலும் தூசியும் கொட்டியதாக அவர் கூறினார்.
இந்த பயங்கர எரிவாயுக் குழாய் வெடிப்பு தொடர்பில் 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 63 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 190 வீடுகள், 148 கார்கள், 11 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Letupan saluran gas di Putra Heights menggegarkan kawasan sekitar, menyebabkan 112 mangsa terjejas, 63 dirawat di hospital, serta 190 rumah dan 148 kereta rosak. ADUN Kinrara menyediakan bantuan, sementara pihak berkuasa terus memantau dan membantu mangsa yang terkesan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *