மலேசியக் கால்பந்து சங்கத் தலைவராக இன்னும் நிறையக் கடப்பாடுகள் உள்ளன

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, மே 8-
தனது தலைமையில் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் இருப்பதால், எஃப்ஏஎம் குழுவைத் தொடர்ந்து வழிநடத்த விரும்புவதாகக் மலேசியக் கால்பந்து சங்கத்தின் (எஃப்ஏஎம்) தலைவர் டத்தோ ஹமிடின் முகமட் அமின் குறிப்பிட்டுள்ளார்.
தேசியப் பயிற்சி மையமும் (என்திசி) புத்ராஜெயாவில் உள்ள புதிய (எஃப்ஏஎம்) தலைமையகத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் கவனம் செலுத்தும் விஷயங்களில் அடங்கும் என்று அவர் மேலும் சொன்னார்.

அதுமட்டுமல்லாமல், ஹரிமாவ் மலாயா அணி, முதல் முறையாக உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறி சரித்திரம் படைப்பதைக் காண விரும்புவதாகவும் அவர் கூறினார். மக்கள் என்னைப் பதவி விலகச் சொல்கிறார்கள். அவர்களுக்கு உண்மை நிலவரம் தெரியாது. 
அதனால் நான் பாதிக்கப்படவும் இல்லை. கால்பந்து மீதான எனது ஆர்வமே என்னை இங்கு நிலைநிறுத்துகிறது என்றார்.
அதே நேரத்தில், 2018ஆம் ஆண்டு முதல் எஃப்ஏஎம்  தலைவராக இருந்து வரும் ஹமிடின், இந்தச் சங்கத்தைத் தொடர்ந்து வழிநடத்துவதற்கான தனது முடிவும் துணை உறுப்பினர்களின் கோரிக்கைகளைப் பொறுத்தது என்றார். மார்ச் மாத இறுதியில் எஃப்ஏஎம்மின்  தலைமை நிர்வாகத்தை இழிவுபடுத்தும் கடிதம் வெளிவந்ததைத் தொடர்ந்து, அவரின் தலைமைப் பதவியால் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்பட்டதோடு அவர் பதவி விலக வேண்டும் என்று சமீபகாலமாக அழைப்புகள் வந்தன என்றும் அவர் சொன்னார்.
இதனிடையே, எஃப்ஏஎம் விதிகளின்படி நடைமுறைகளைப் பின்பற்றி, அடுத்த ஆண்டு தேர்தலில் யார் போட்டியிட விரும்புகிறார்களோ போட்டியிடலாம் என்று அவர் கூறினார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *