விதிகளை மீறிய 32,031 கனரக வாகனங்களுக்கு அபராதம்! 21 லாரிகள் பறிமுதல்! – JPJ MALAYSIA

- Sangeetha K Loganathan
- 31 Mar, 2025
மார்ச் 30,
பெருநாள் காலங்களில் கனரக வாகனங்கள் சாலைகளில் பயணிக்க கூடாது எனும் கட்டுப்பாட்டு விதிகளை மீறிய 21 கனரக லாரிகளைப் போக்குவரத்துக் குற்றப்புலனாய்வுத் துறையான JPJ பறிமுதல் செய்துள்ளதாக அதன் தலைமை இயக்குநர் Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார். முதற்கட்டமாக 41 கனரக லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தடையை மீறிய 62 கனரக லாரிகளில் 21 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று முதல் பெருநாளுக்கானச் சாலை கட்டுப்பாட்டு விதி அமல்படுத்தப்பட்ட நிலையில் சுமார் 122,655 லாரிகளைச் சோதனையிட்டதாகவும் 32,031 அபராதங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் லாரிகள் பெருநாள் முடிந்த பின்னரே அதன் உரிமையாளர் மீட்டெடுக்க முடியும் எனும் சிறப்பு விதியை அமல்படுத்தியிருப்பதாக Datuk Aedy Fadly Ramli தெரிவித்தார்.
JPJ menyita 21 kenderaan berat yang melanggar larangan pergerakan sempena Aidilfitri, dengan 41 notis saman dikeluarkan. Larangan ini berkuat kuasa empat hari. Sepanjang Op HRA 2025, JPJ telah mengeluarkan 32,031 saman dan memeriksa 122,655 kenderaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *