தீயில் கருகிய அங்காடிக் கடை!

top-news

ஏப்ரல் 3,

மரக்கட்டைகளால் செய்யப்பட்ட தளவாடப் பொருள்களை விற்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை முழுவதும் எரிந்து கருகியது. நேற்றிரவு 8.55 மணிக்குத் தீ விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதும் 10 தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Kuala Terengganu மாவட்டத் தீயணைப்பு மீட்பு ஆணைய இயக்குநர் Kasyfi Syahmi bin Ghazal தெரிவித்தார். 

Jalan Sultan Mahmud சாலையில் அமைந்துள்ள தளவாட அங்காடிக் கடை பலகையால் கட்டப்பட்டிருந்ததால் தீ வேகமாகப் பரவியதாகவும் கடையில் இருந்த தொழிலாளர்கள் பொதுமக்களால் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இரவு 10 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தீ விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என அவர் உறுதிப்படுத்தினார். சம்மந்தப்பட்ட தீ விபத்திற்கானக் காரணத்தைத் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் 80% கடை தீயில் கருகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sebuah kedai perabot di Jalan Sultan Mahmud musnah dalam kebakaran. Api merebak pantas kerana binaan kayu namun semua pekerja berjaya diselamatkan. Kebakaran dipadam sepenuhnya pada 10 malam tanpa korban jiwa. Punca kebakaran masih dalam siasatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *