உணவகத்தில் 7 கடைகள் தீயில் கருகின!

top-news

ஏப்ரல் 3,

ஜொகூரின் பிரபல உணவுக் கடைகளான Restoran Jeng Kuan கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் உணவகத்தில் இயங்கி வந்த 7 கடைகள் முழுமையாகத் தீயில் கருகின. இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்துக் குறித்து அவசர அழைப்பைப் பெற்றதாக Batu Pahat, மாவட்டத் தீயணைப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Abdul Ghafar Mahadi தெரிவித்தார். அழைப்பைப் பெற்றதும் 21 தீயணைப்பு அதிகாரிகள் சம்வப இடத்திற்கு விரைந்ததாக அவர் தெரிவித்தார்.

சம்மந்தப்பட்ட Jeng Kuan மேடான் SELERAவில் இயங்கி வந்த 7 கடைகள் முழுவதும் தீயில் கருகியதாகவும் அதிகாலை சுமார் 4 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். தீ விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என அவர் உறுதிப்படுத்தினார். சம்மந்தப்பட்ட தீ விபத்திற்கானக் காரணத்தைத் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் Batu Pahat, மாவட்டத் தீயணைப்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Abdul Ghafar Mahadi தெரிவித்தார்.

Tujuh lot kedai di medan selera separuh kekal di Restoran Jeng Kuan, Batu Pahat musnah dalam kebakaran awal pagi tadi. Pihak bomba menerima panggilan kecemasan pada jam 3 pagi dan api berjaya dikawal sepenuhnya sekitar jam 4 pagi. Tiada kecederaan dilaporkan dan punca kebakaran masih disiasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *