ஏஎப்சி சாம்பியன் லீக் காலிறுதியாட்டத்தில் அல் நசர்!

- Muthu Kumar
- 12 Mar, 2025
ரியாத், மார்ச் 12-
ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதியாட்டத்திற்கு அல் நசர் அணியினர் முன்னேறியுள்ளனர். அல் அவால் பார்க் அரங்கத்தில் நடைபெற்ற சுற்று 16ன் இரண்டாவது ஆட்டத்தில் அல் நசர் அணியினர் எஸ்தாங்லால் அணியை சந்தித்தனர்.
இதில் அல் நசர் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் எஸ்தாங்லால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். அல் நசர் அணிக்காக ஜோன் டுரன் இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்தார். இரு ஆட்டங்களின் முடிவில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அல் நசர் அணியினர் ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *