ரயில் நிலயங்களில் பிளாட்ஃபார்ம் சென்சார்கள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 1: தித்திவாங்சா எல்ஆர்டி நிலையத்தில் ஏற்பட்ட ஒரு மரண விபத்தைத் தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு, எல்ஆர்டி நிலையங்களில் பிளாட்ஃபார்ம் சென்சார்களை நிறுவ பிரசாரனா மலேசியா பெர்ஹாட் திட்டமிட்டுள்ளது.

ஹரி ராயா ஐடில்ஃபிட்ரியின் போது பசார் சினி பேருந்து மற்றும் ரயில் நிலையத்திலில் நேற்று பணியில் இருந்த ரேபிட் கேஎல் பணியாளர்களை சந்தித்த பிறகு, பிரசாரனாவின் தலைவரும், குழு தலைமை நிர்வாக அதிகாரியுமான அசாருதீன் மாட் சா இதைத் தெரிவித்தார்.

ஓர் இடைக்கால தீர்வாக, ஒரு பயணி ஆபத்தான பகுதிக்குள் நுழைந்தால் இவ்வகை சென்சார்கள் தங்களுக்கு எச்சரிக்கை செய்யும் என்று அவர் கூறினார்.

 கடந்த பிப்ரவரி 22 அன்று, தித்திவாங்சா எல்ஆர்டி தண்டவாளத்தில் பார்வையற்ற ஒருவர் விழுந்து ரயிலில் மோதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது! 

Susulan insiden kematian di stesen LRT Titiwangsa, Prasarana Malaysia Berhad merancang memasang sensor platform di stesen LRT untuk meningkatkan keselamatan, terutama bagi OKU. Sensor ini akan memberi amaran jika penumpang memasuki kawasan berbahaya.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *