PUTRA HEIGHTS வெடிப்பை நேரில் ஆய்வு செய்த சிலாங்கூர் இளவரசர் Tengku Amir Shah!

top-news

ஏப்ரல் 2,

Putra Heights எரிவாயு குழாய் வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் சிலாங்கூர் இளவரசர் Tengku Amir Shah Sultan Sharafuddin Idris Shah இன்று பார்வையிட்டார். இன்று நண்பகல் 1.30 மணிக்கு எரிவாயு விபத்து ஏற்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளை நேரில் பார்வையிட்டதுடன் சம்பவம் தொடர்பானப் பாதுகாப்புப் பணிகள் குறித்தும் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் குறித்தும் கேட்டறிந்ததாகச் சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.

Putra Heights பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்புகள் குறித்தான முதற்கட்ட பணிகள் குறித்து இளவரசரிடம் விளக்கமளிக்கப்பட்டதாகவும் வெடிப்புச் சம்பவத்தால் ஏற்பட்டுள்ள இழப்புகள் தற்போது கணக்கிடப்பட்டு வருவதாகவும் விசாரணைக்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அதன் வழிமுறைகள் தொடர்பான விளக்கத்தை இளவரசரிடம் விளக்கமளிக்கப்பட்டதாகவும் சிலாங்கூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.

Sultan Selangor, Tengku Amir Shah melawat lokasi letupan saluran gas di Putra Heights. Baginda meninjau usaha keselamatan dan bantuan kepada mangsa. Pihak berkuasa memberi penerangan kepada baginda mengenai langkah-langkah awal yang diambil serta perkembangan siasatan terhadap insiden tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *