ஐடில் பித்ரி மூன்று நாள்களுக்கு முன்னதாக காணாமல் போன UNITAR விரிவுரையாளர்! சோகத்தில் குடும்பம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 3: ஐடில்ஃபிட்ரிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பல்கலைக்கழக விரிவுரையாளர் காணாமல் போனது அவரது குடும்பத்தினரை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.  அவரைக் கண்டுபிடிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் பயனற்றதாக இருப்பதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்,

யுனிவர்சிட்டி துன் அப்துல் ரசாக் (UNITAR) விரிவுரையாளரான 52 வயதான ஹஸ்லினா அப்துல்லா, கடந்த மார்ச் 28 ஆம் தேதி, காலை 8.30 மணிக்கு அவரது கணவர் 53 வயதான  ஜாஃப்ரி அப் ரஹ்மான்  பல்கலைக்கழகத்தில் இறக்கிவிட்ட பிறகு காணாமல் போனார்.

அவரது மூத்த மகன் 30 வயது முகமது சுல்ஜவலில் இக்ராம் ஜாஃப்ரி, அதே நாள் மாலை 4 மணிக்கு செந்தூல் திமூர் லாவுட் LRT நிலையத்தில் தனது தாயாரை தனது தந்தை அழைத்துச் செல்லவிருப்பதாகக் கூறினார். இருப்பினும், அவரைப் பற்றிய எந்த அறிகுறியும் இல்லை.

தனது தந்தை மற்றும் இளைய சகோதரி ஐனோல் அதிகா, நிலையத்தில் அவருக்காகக் காத்திருந்தனர். ஆனால் தனது தாயார் வரவில்லை. அவர்கள்  மொபைல் போனை பலமுறை அழைக்க முயன்றும் பதில் இல்லை. வாட்ஸ்அப் செய்திகளும் பதிலளிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

ஹஸ்லினாவை அழைத்துக்கொண்டு ராயாவுக்காக தெமர்லோவில் உள்ள தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் தன் அம்மா வரவில்லை என வேதனையோடு மகன் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து பல இடங்களில் தேசியதாகவும், போலீஸ் புகார் கொடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ஹஸ்லினா தைராய்டு நோயால் அவதிப்படுவதால் அவர்களின் கவலைகள் அதிகரித்துள்ளன. இது சில நேரங்களில் சோர்வு மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும் என்பதால் அச்சத்தில் உள்ளனர்.

சுங்கை பூலோ உட்பட கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள அனைத்து முக்கிய மருத்துவமனைகளிலும் அவரது குடும்பத்தினர் தேடியும் எந்த பயனும் இல்லை என்று ஜாஃப்ரி கூறினார்.

ஈத்தின் இரண்டாவது நாளில், அவர் வழக்கமாக சிகிச்சை பெறும் தனியார் மருத்துவமனை உட்பட மருத்துவமனைகளை நாங்கள் சோதித்தோம், ஆனால் அவரைப் பற்றிய எந்த தடயமும் இல்லை என்று குறிப்பிட்டார்.

எனவே, பொதுமக்கள் யாராவது என் அம்மாவைப் பார்த்திருந்தால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும் என்று மகன் கோரிக்கை வைத்துள்ளார்.

ஈத் துணிகளை வாங்கச் சென்றபோது காணாமல் போவதற்கு ஒரு நாள் முன்பு எடுக்கப்பட்ட சமீபத்திய புகைப்படத்தோடு உருக்கமான கோரிக்கை வைத்துள்ளனர்.

அவர் காணாமல் போன நாளில், கருப்பு தூடோன்ம்க் மற்றும் அடர் நிற ஆடைகளை அணிந்திருந்தார் என்று அவர் மேலும் கூறினார்.

தகவல் தெரிந்த பொதுமக்கள் 013-4257842 என்ற எண்ணில் அல்லது அவரது இளைய சகோதரி ஐனோனை 013-9134992 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு ஜாஃப்ரி கேட்டுக்கொண்டார்!

Seorang pensyarah UNITAR, Haslina Abdullah, 52, dilaporkan hilang sejak 28 Mac selepas dihantar suaminya ke universiti. Keluarga gagal menghubunginya dan bimbang kerana beliau menghidap penyakit tiroid. Orang ramai yang mempunyai maklumat diminta menghubungi keluarganya segera.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *