8 நாள்களுக்கு முன் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

- Sangeetha K Loganathan
- 06 Apr, 2025
ஏப்ரல் 6,
காணாமல் போனதாகக் கடந்த 8 நாள்களாகத் தேடப்பட்டு வந்த 59 வயது ஆடவர் செம்பனை தோட்டத்திலுள்ள ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக Kuala Krai மாவட்டக் காவல் ஆணையர் MAZLAN MAMAT தெரிவித்தார். நேற்று பிற்பகல் 12 மணியளவில் அவரின் மோட்டார் சைக்கிளையும் அவரின் உடலையும் GUA MUSANG பகுதியில் உள்ள SUNGAI DURIAN ஆற்றிலிருந்து மீட்டதாக அவர் தெரிவித்தார்.
சாலையிலிருந்து ஆற்றில் மோட்டார் சைககிள் சறுக்கியதற்கானத் தடயங்கள் கண்டறியப்பட்டதால் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி ஆற்றில் கவிழ்ந்ததால் அவர் உயிரிழந்திருக்கலாம் என Kuala Krai மாவட்டக் காவல் ஆணையர் MAZLAN MAMAT தெரிவித்தார். 59 வயது ஆடவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டிருப்பதால் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் மேலதிக விசாரணைகளைத் தொடர்வதாக Kuala Krai மாவட்டக் காவல் ஆணையர் MAZLAN MAMAT தெரிவித்தார்.
Lelaki berusia 59 tahun yang hilang sejak 8 hari lalu ditemui maut di Sungai Durian, Gua Musang. Mangsa dipercayai terlibat dalam kemalangan motosikal yang mengakibatkan dia terjatuh ke sungai. Polis teruskan siasatan selepas bedah siasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *