PUTRA HEIGHTS வெடிப்பு! சிலாங்கூர் அரசின் மெத்தனம்! பெரிக்காத்தான் சாடல்!

- Sangeetha K Loganathan
- 02 Apr, 2025
ஏப்ரல் 2,
நேற்று Putra Heights எரிவாயு குழாய் வெடிப்பிற்குச் சிலாங்கூர் அரசாங்கத்தின் மெத்தனமான ஆட்சியே காரணம் என முன்னால் சிலாங்கூர் மெந்திரி பெசாரும் பெரிக்காத்தானின் சிலாங்கூர் மாநிலத் தலைவருமான Datuk Seri Azmin Ali சாடினார். குடியிருப்புப் பகுதியின் அருகில் எரிவாயு குழாய்கள் அமைக்க உரிமம் வழங்கியதிலிருந்து சம்மந்தப்பட்ட பகுதியில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளவும் சிலாங்கூர் அரசாங்கம் உரிமம் வழங்கியிருப்பதாக Datuk Seri Azmin Ali குற்றம்சாட்டினார்.
தற்போது சம்மந்தப்பட்ட பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அந்த விசாரணைகள் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும் என்றும் விசாரணைக் குழுவில் அனைத்து தரப்பினரும் நடுநிலையாக இருக்க வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் Datuk Seri Azmin Ali வலியுறுத்தினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான இழப்பீடுகளைச் சிலாஙகூர் அரசாங்கமும் கட்டுமானத்தை மேற்கொண்ட நிறுவனங்களும் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Bekas Menteri Besar Selangor, Datuk Seri Azmin Ali, menyalahkan kerajaan negeri atas kelewatan tindakan dalam kejadian letupan saluran gas di Putra Heights. Beliau mendakwa kerajaan negeri bertanggungjawab kerana memberikan kebenaran pembinaan berhampiran saluran gas. Azmin turut menuntut siasatan yang telus serta pampasan yang adil kepada mangsa.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *