PUTRA HEIGHTS வெடிப்பு! குறை சொல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்! - Amirudin Shari

top-news

ஏப்ரல் 2,

நேற்று Putra Heights எரிவாயு குழாய் வெடிப்பிற்கானக் காரணத்தையும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்புகள் குறித்து 72 மணி நேரத்திற்குள் முழு விசாரணை அறிக்கை பொதுவில் வழங்கப்படும் என சிலாங்கூர் மாநில மெந்திரி பெசார் Amirudin Shari உறுதியளித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கான நலனைக் கருத்தில் கொண்டு தேசிய மாநில அரசுகளின் நிவாரணங்கள் முழுமையாகச் சென்றடைவதைத் தாம் உறுதிச் செய்து வருவதாகவும் மற்றொரு குழு வெடிப்பிற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் Amirudin Shari தெரிவித்தார்.

வெடிப்புச் சம்பவத்தை மையமாகக் கொண்டு எதிர்மறையானக் கருத்துகளையும் குற்றச்சாட்டுகளை ஆதரமின்றி தெரிவிப்பதில் எந்தவொரு பயனுமில்லை என்றும் வெடிப்புக்கானக் காரணத்தையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைக்க விரும்புவர்கள் ஆதாரத்துடன் முன்வைத்தால் அரசு அதனைப் பரிசீலிக்கும் என்றும் இல்லாத பட்சத்தில் நேரத்தை வீணடிக்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் என சிலாங்கூர் மாநில மெந்திரி பெசார் Amirudin Shari தெரிவித்தார்.

Menteri Besar Selangor, Amirudin Shari, memberi jaminan bahawa laporan penuh mengenai letupan saluran gas di Putra Heights akan dikeluarkan dalam tempoh 72 jam. Beliau menegaskan bahawa bantuan kepada mangsa sedang disalurkan dan meminta semua pihak mengutamakan kebajikan mangsa berbanding membuat tuduhan tanpa bukti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *