கோயில்களுக்கு எதிரான முகநூல் பக்கம்! இருவர் மீது MCMC விசாரணை!

- Sangeetha K Loganathan
- 03 Apr, 2025
ஏப்ரல் 3,
இந்து கோயில்களுக்கு எதிராகச் செயல்பட்ட முகநூல் பக்கத்தின் உரிமையாளர்கள் என நம்பப்படும் இருவரைத் தேசிய பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC விசாரணை நடத்தியதாக MCMC அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. முகநூல் பக்கத்தில் கோயில்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து கோயில் ஹராம் என அடையாளப்படுத்தி வருவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர்கள் விசாரிக்கப்பட்டதாகவும் அவர்களின் கைத்தொலைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட முகநூல் கணக்கில் மொத்தம் 110 பதிவுகள் இடம் பெற்றிருக்கும் நிலையில் அதில் 106 பதிவுகள் COMMUNITY GUIDELINES எனும் கட்டுப்பாட்டை மீறிய பதிவுகள் என்றும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சம்மந்தப்பட்ட முகநூல் பக்கத்தைத் தற்காலிகமாக 32 நாள்கள் முடக்கியிருப்பதாகவும் MCMC தெரிவித்துள்ளது. அவர்கள் மீதானக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் சிறை அல்லது RM 500,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தேசியப் பல்லூடகப் பாதுகாப்பு ஆணையமான MCMC தெரிவித்துள்ளது.
MCMC menyiasat dua individu disyaki pemilik laman Facebook yang menentang kuil Hindu. Telefon mereka dirampas, dan laman itu ditutup sementara selama 32 hari. Jika bersalah, mereka boleh dipenjara dua tahun atau didenda RM500,000, atau kedua-duanya sekali.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *