DAP தலைவரானார் கோபிந்த் சிங்
.jpeg)
- Shan Siva
- 16 Mar, 2025
ஷா ஆலம், மார்ச் 16: டாமான்சாரா எம்.பி., கோபிந்த் சிங் டியோ, டிஏபியின் புதிய தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கட்சியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய செயற்குழுவால் (CEC) கோபிந்த் சிங் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதனை அடுத்து தலைவராக இருந்த லிம் குவான் எங் ஆலோசகராத் தேர்வானார்.
இதற்கிடையில், லோக் சியூ ஃபூக் இரண்டாவது முறையாக டிஏபி பொதுச்செயலாளராகத் தனது பதவியைத் தற்காத்துக்கொண்டார்.
கட்சியின் தலைவர் பதவியை தக்கவைக்க, CEC க்குள் இருந்து லிம் போதுமான வாக்குகளைப் பெற மாட்டார் என்ற ஊகங்கள் தேர்தலுக்கு முன்னதாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
2025-2028 காலத்திற்கான DAP செயற்குழுவினர்:
ஆலோசகர் - லிம் குவான் எங்
தலைவர் - கோபிந்த் சிங் டியோ
துணைத் தலைவர் - ங்கா கோர் மிங்
உதவித் தலைவர்கள் - சோங் சியெங் ஜென், தியோ நீ சிங், இங் சூயி லிம், சியாரட்சன் ஜோஹன், ஜே அருள் குமார்
பொதுச் செயலாளர் - லோக் சியூ ஃபூக்
துணைச் செயலாளர்கள் - ஸ்டீவன் சிம், ஹன்னா யோ, ராம்கர்பால் சிங்
பொருளாளர் - Ngeh Koo Ham
உதவி பொருளாளர் - Ng Sze Han
அமைப்புச் செயலாளர் - கூ போய் தியோங்
உதவி அமைப்புச் செயலாளர்கள் - லீ சின் சென், டான் ஹாங் பின்
விளம்பர செயலாளர் - யோ பீ யின்
உதவி விளம்பர செயலாளர்கள் - சைஃபுரா ஓத்மான், வோங் ஷு கி
சர்வதேச செயலாளர் - கஸ்தூரி பட்டு
உதவி சர்வதேச செயலாளர் - ஆலிஸ் லாவ்
அரசியல் கல்வி இயக்குனர் - ஹோவர்ட் லீ
உதவி அரசியல் கல்வி இயக்குனர் - விவியன் வோங்
மூலோபாய இயக்குனர் - லியூ சின் டோங்
கொள்கை இயக்குனர் - சான் ஃபூங் ஹின்
தேர்தல் இயக்குனர் - வோங் கா வோ
குழு உறுப்பினர்கள் - தியோ கோக் சியோங், சோவ் கோன் இயோவ்.
Gobind Singh Deo dilantik sebagai Pengerusi Nasional baharu DAP oleh Jawatankuasa Eksekutif Pusat (CEC), menggantikan Lim Guan Eng yang menjadi penasihat. Loke Siew Fook mengekalkan jawatan Setiausaha Agung, manakala CEC turut melantik pemimpin lain bagi penggal 2025-2028.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *