லிவர்பூல் அணிக்காக பல சாதனைகளில் முகமது சாலா!

top-news
FREE WEBSITE AD

லிவர்பூல் கால்பந்து அணி வீரர் முகமது சாலா பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
பிரீமியர் லீக்கில் சவுத்தாம்ப்டன் கால்பந்து கிளப் உடன் லிவர்பூல் அணி நேற்றிரவு மோதியது.இந்தப் போட்டியில் லிவர்பூல் அணி 3-1 என வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முகமது சாலா பெனால்டி வாய்ப்பில் 2 கோல்களை அடித்து அசத்தினார். இதன்மூலம் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் முகமது சாலா.
கால்பந்து விளையாட்டில் மிகவும் பிரபலமான லிவர்பூல் அணிக்காக முகமது சாலா விளையாடி வருகிறார்.

எகிப்திய நாட்டைச் சேர்ந்த முகமது சாலாவுக்கு 32 வயதாகிறது. சவுத்தாம்ப்டன் உடன் 2 கோல்கள் அடித்ததன் மூலம் பிரீமியர் லீக்கில் அதிக கோல்கள் (184) அடித்தவர்கள் பட்டியலில் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *