டோக்கியோ பேருந்து விபத்து - மலேசியர்களும் சிக்கியதாகத் தகவல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப்ரல் 6: டோக்கியோவில் நேற்று இரண்டு சுற்றுலா பேருந்துகள் மோதிய விபத்தில் காயமடைந்த 47 பேரில் மலேசியர்களும் அடங்குவர் என்று நம்பப்படுகிறது.

ஹாங்காங்கின் ஆன்லைன் ஊடகமான டிம்சம் டெய்லியின் தகவல் படி, இந்த பேருந்துகள் ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தைவானில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரே சுற்றுலாக் குழுவைச் சேர்ந்தவை என்பது தெரியவந்துள்ளது.

ஜப்பானின் கியோடோ செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி பெர்னாமா இன்று முன்னதாக செய்தி வெளியிட்டது. இந்த விபத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும்,  உயிர்ச் சேதம் எதுவும் நிகழவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக பின்புற பேருந்து சரியான நேரத்தில் பிரேக் போடத் தவறியதால் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Dua bas pelancongan bertembung di Tokyo, mengakibatkan 47 cedera termasuk rakyat Malaysia. Bas membawa pelancong dari Hong Kong, Malaysia, Singapura dan Taiwan. Tiada kematian dilaporkan, dan kemalangan berlaku akibat kesesakan lalu lintas.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *