போலி “டத்தோஸ்ரீ" பட்டம்-நபரிடம் போலீஸ் விசாரணை!

top-news
FREE WEBSITE AD

ஷாஆலம், ஏப். 5-போலி

"டத்தோஸ்ரீ பட்டத்தைப் பயன்படுத்திய நபரிடம் சிலாங்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கௌரவப் பட்டம் சிலாங்கூர் சுல்தானால் வழங்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அந்நபர் தமது முகநூல் பக்கத்தில் அப்பட்டத்தைப் பயன்படுத்தி வந்துள்ளார். அது சிலாங்கூர் சுல்தானால் வழங்கப்பட்டது என்றும் அந்நபர் கூறிவந்துள்ளார்.

போலீசார் நடத்திய விசாரணையில், அந்நபருக்கு அப்பட்டம் வழங்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த சந்தேகப் பேர்வழி மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று சிலாங்கூர் போலீஸ் தலைவர் உசேன் ஒமார் கான் குறிப்பிட்டார். அப்பட்டம் மாண்புக்குரியது ஆகும். அதனை எவரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று அவர் எச்சரித்தார்.

Polis Selangor menyiasat seorang individu yang didakwa menggunakan gelaran "Datuk Seri" palsu di laman Facebook miliknya. Gelaran itu kononnya dikatakan dianugerahkan oleh Sultan Selangor, namun siasatan mendapati tiada anugerah diberikan. Polis mengingatkan agar gelaran kehormatan tidak disalahgunakan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *