பல சாலைகளில் நெரிசல்! KLK சாலையில் 20 கிமீ போக்குவரத்து நெரிசல்

- Shan Siva
- 05 Apr, 2025
கோலாலம்பூர், ஏப்ரல் 5: கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் (KLK)
போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் ஹரி ராயா
ஐடில்ஃபிட்ரியைக் கொண்டாடிவிட்டு தலைநகருக்குத் திரும்புவதால் தற்போது நெரிசல் காணப்படுவதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களின்
எண்ணிக்கை அதிகரித்ததால், இன்று காலை 10.40 மணி நிலவரப்படி, கராக்கிலிருந்து லெந்தாங் வரை 20 கிலோமீட்டருக்கும் அதிகமான போக்குவரத்து நெரிசல்
ஏற்பட்டுள்ளது என்பதை மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (LLM) செய்தித் தொடர்பாளர் ஒருவர், உறுதிப்படுத்தினார்.
தலைநகரை நோக்கிச்
செல்லும் E1 மற்றும் E2 வழித்தடங்களுக்கான வடக்கு-தெற்கு
விரைவுச்சாலையில் (PLUS) சிறிய நெரிசல்
இருப்பதாகவும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பெர்மாத்தாங்
பாவ்விலிருந்து பிராய் வரையிலான E1 சாலையிலும்,
ஜூரு ஆட்டோசிட்டியிலிருந்து ஜூரு டோல் பிளாசா
வரையிலும், தைப்பிங்கிலிருந்து
சாங்காட் ஜெரிங் வரையிலும் போக்குவரத்து மெதுவாக உள்ளது, கோலாலம்பூர் நோக்கிச் செல்லும் மெனோரா சுரங்கப்பாதை அருகே 3.8 கி.மீ.க்கும் அதிகமான போக்குவரத்து நெரிசல்
உள்ளது.
பிளஸ் தெற்கு நோக்கிச் செல்லும் பாதை E2 இல், கூலாயிலிருந்து செடெனாக் வரையிலான போக்குவரத்து மெதுவாக உள்ளது, அதே நேரத்தில் கிழக்கு கடற்கரை விரைவுச்சாலை (LPT) 1 மற்றும் 2 இதுவரை சீராக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்!
Aliran trafik di Lebuhraya KL-Karak sesak melebihi 20km dari Karak ke Lentang, akibat perantau kembali ke ibu kota selepas Aidilfitri. PLUS E1 dan E2 juga alami kesesakan ringan di beberapa lokasi. Lalu lintas di LPT1 dan LPT2 masih lancar setakat ini.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *