போடா ஆண்டவனே நம்ம பக்கம்! - விராட் கோலி!

top-news
FREE WEBSITE AD

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோற்கடித்து வெளியேற்றியது.

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 219 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட் கோலி 47, கேப்டன் டு பிளேஸிஸ் 53, ரஜத் படிடார் 41 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

ஆனால் அதை துரத்திய சென்னை அணிக்கு சிவம் துபே 7, கேப்டன் ருதுராஜ் 0, மிட்சேல் 4 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் ரச்சின் ரவீந்திரா 61, ஜடேஜா 42*, ரகானே 33, தோனி 25 ரன்கள் எடுத்தும் சென்னை தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக கோப்பையை தக்க வைக்க முடியாமல் சென்னை பரிதாபமாக வெளியேறியது.

மறுபுறம் வெற்றியை பதிவு செய்த பெங்களூரு 4வது அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று அற்புதமான கம்பேக் கொடுத்தது. குறிப்பாக முதல் 7 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்ற அந்த அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடியது. அதனால் முதல் அணியாக வீட்டுக்கு கிளம்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு அதன் பின் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 16 வருடங்களாக கோப்பையை வெல்லாவிட்டாலும் பெங்களூரு அணி நேர்மையாக விளையாடி வருவதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். அதை பார்த்து கடவுளே மனமிறங்கி இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான திட்டத்தை வகுத்ததாக தெரிவிக்கும் விராட் கோலி இது பற்றி கடவுளிடம் திட்டம் இருக்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் நேர்மையாக இருக்க வேண்டும்.

அந்த வகையில் எங்கள் கடின உழைப்பில் நாங்கள் மிகவும் நேர்மையாக இருந்தோம் என்று நினைக்கிறேன். அதற்கான வெகுமதிகள் எங்களுக்கு கிடைத்துள்ளன. இதைத் தவிர்த்து நான் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை. அடுத்த போட்டியில் கவனம் செலுத்த உள்ளோம்” என்று கூறினார். இதைப் பார்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள் அப்படியானால் நாங்கள் நேர்மையுடன் விளையாடவில்லையா? என்று விராட் கோலி மீது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

அதாவது பொதுவாக நாங்கள் 5 கோப்பையை வென்றோம் என்று சிஎஸ்கே ரசிகர்கள் சொல்லும் போதெல்லாம் 2016, 2017 வருடங்களில் சூதாட்டப் புகாரில் தடை பெற்றதையும் சொல்லுங்கள் என்று ஆர்சிபி ரசிகர்கள் பதிலடி கொடுப்பது வழக்கமாகும். அந்த நிலையில் சிஎஸ்கே போல் அல்லாமல் ஆர்சிபி தொடர்ந்து நேர்மையுடன் விளையாடி வருவதாக விராட் கோலி மறைமுகமாக தெரிவித்துள்ளார். அதனால் இம்முறை ஆண்டவன் தங்கள் பக்கம் இருப்பதால் கோப்பையை வெல்வோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *