சீர்திருத்தம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாதீர்கள்! அரசுக்கு பெர்சே அறிவுறுத்து!

top-news
FREE WEBSITE AD

தேர்தல் ஆணைய (EC) கமிஷனர் ஒருவர் அண்மையில் நியமிக்கப்பட்டது குறித்து பெர்சே அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ளது.

இது பக்காத்தான் ஹராப்பான் (PH) மற்றும் பாரிசான் நேசனல் (BN) கூட்டணிகள் அளித்த தேர்தல் உறுதிமொழிகளுக்கு எதிரானது என்று பெர்சே தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையர்  சப்தின் இப்ராஹிமின் நியமனம் நாடாளுமன்ற மறுஆய்வு இல்லாமல் செய்யப்பட்டதாக பெர்சே குற்றம்சாட்டியது. இதனால் பிரதமர் டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராகிமும் ஒற்றுமை அரசாங்கமும் நிறுவன சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் நேர்மையற்றவர்களாகத் திகழ்வதாக பெர்சே நினைவுறுத்தியது.

15வது பொதுத் தேர்தலுக்கானPH இன் ‘Buku Harapan’ அறிக்கையின் 15வது வாக்குறுதியானது நிறுவன ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதாகும்.

 மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் காவல்துறை போன்ற முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள் முதலில் நாடாளுமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று அது கூறியது.

அதே வாக்குறுதி BN இன் 'செயல் மற்றும் முயற்சி' ஆவணத்திலும் கூறப்பட்டுள்ளது,

.தேர்தல் ஆணையத்தின் தற்போதைய தலைவர் அப்துல் கானி சலே விரைவில் ஓய்வு பெற உள்ளதால், புதிய தலைவரின் நியமன செயல்முறையை மறுசீரமைக்க உடனடியாக ஒரு பாராளுமன்றக் குழுவை நிறுவுவதன் மூலம் புத்ராஜெயா சரியான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று பெர்சே கூறுகிறது.

தேர்தல் ஆணையத்தின் தலைவர்களை நியமிப்பதற்கான தெளிவான செயல்முறை மற்றும் அளவுகோல்களை வகுத்துள்ளதால், நாடாளுமன்றக் குழுவில் அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இருக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.

தேர்தல் ஆணையத் தலைவர் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பு கொள்ளக் கூடாது என்றும், தேர்தல் தொடர்பான விஷயங்களைப் பற்றிய அறிவும், கிரிமினல் மற்றும் தேர்தல் குற்றங்கள் பற்றிய தெளிவான பதிவையும் பெற்றிருக்க வேண்டும் என்றும் பெர்சே தெரிவித்துள்ளது.

"இது செயல்படுத்தப்படாவிட்டால், மதானி அரசாங்கமும் பிரதமரும் இனி 'சீர்திருத்தம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியாது, இது இதுவரை உதட்டளவில் பேசுவதைத் தவிர வேறில்லை என்று பெர்சே கடுமையாக தனது ஆதங்கத்தை முன்வைத்துள்ளது!

 


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *