வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

ஜொகூர் பாரு. ஏப். 2-

ஜொகூர் பாரு வடக்கு மாவட்ட போலீசாரிடம் மார்ச் 28, 2025 அன்று இரவு 9.41 மணியளவில் 21 வயது இளைஞர் புகார் அளித்தார். அதில், அதே நாள் மாலை 6.30 மணியளவில் ஜொகூர் பாருவில் அமைந்துள்ள ஓர் அபார்ட்மெண்டின் முன்பாக, தன்னை அடித்ததாக அவர் தெரிவித்ததாக ஜொகூர் பாரு வடக்கு மாவட்ட தலைவர் ஏ.சி.பி பல்வீர் சிங் மஹிண்டர் சிங் போலீஸ் அறிக்கையில் குறிப்பிட்டார்

விசாரணையின் போது, பாதிப்புற்றவர் தனது சகோதரன் மற்றும் சகோதரி உடன் காரில் சென்றபோது, ஒரு குழுவினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரியவந்தது. பிறகு, அவர் காரில் இருந்து வெளியேறியதும், அந்தக் குழுவினரால் கைகளாலும், கால்களாலும், தலைக்கவசத்தாலும் தாக்கப்பட்டார்.

மேலும், குழுவில் ஒருவரால், ஒரு நாற்காலியை எடுத்து, அவரது சகோதரியின் வாகனத்தின் மீது விசியதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது என்றார். வைரலான அந்த காணொளி காட்சிப்படி அடித்தவர்களும் அடி வாங்கியவர்களும் இந்தியர்களென பதிவாகியுள்ளது.

அனுப்பிய தகவலின் அடிப்படையில், மார்ச் 29 மற்றும் 30, 2025 ஆகிய தேதிகளில், ஜொகூர் பாரு வடக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட நால்வரையும் தம்போய், ஜொகூர் பாருவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களின் வயது 15 முதல் 18 வரை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அவர்கள் வைத்திருந்த சில பொருட்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணையின் மூலம், இந்த நால்வரில் இருவருக்கு முந்தைய குற்றச் செயல் தொடர்புடைய பதிவு இருப்பதாகவும், மற்ற இருவருக்கு எந்தவிதமான குற்றச் செயல்
பின்னணியும் இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டது. மார்ச் 30, 2025 அன்று அவர்கள் ஜொகூர் பாரு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, காவல்துறையால் தடுத்து வைக்க அனுமதி பெறப்பட்டது.

இந்த வழக்கு மலேசிய தண்டனைச் சட்டம் பிரிவு 148 மற்றும் 427 அடிப்படையில் விசாரணை செய்யப்படுகிறது. பிரிவு 148இன் கீழ், மோதல்களில் பங்கேற்று, ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தும் குற்றத்திற்கு அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படலாம். பிரிவு 427இன் கீழ், வெ.25 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள சொத்துகளை சேதப்படுத்தும் குற்றத்திற்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றார்.

இதனையடுத்து, போலீசார் மக்களிடத்தில் அமைதியை பேணவும். சட்டத்தை மீறாமல் பொறுப்புடன் நடந்து கொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளனர். சட்ட ஒழுங்கை காக்கும் பொறுப்பு அதிகாரிகளிடம் விட்டுவிட்டு, வன்முறைகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

Seorang pemuda berusia 21 tahun membuat laporan polis di Johor Bahru Utara selepas dipukul sekumpulan individu pada 28 Mac 2025. Polis menahan empat suspek berusia 15 hingga 18 tahun, dua daripadanya mempunyai rekod jenayah. Kes disiasat di bawah Seksyen 148 dan 427 Kanun Keseksaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *