ஹரிராயா திறந்த இல்ல விருந்துபசரிப்பில் பேரரசர் குடும்பத்தினர் பங்கேற்பு!

- Muthu Kumar
- 03 Apr, 2025
(கோகி கருணாநிதி)
ஜொகூர்பாரு. ஏப். 3
மலேசிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம். ஷவ்வால் 2ஆம் நாள் ஜொகூர் இஸ்தானாவில் நடைபெற்ற ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி ஜொகூர் பெரிய அரண்மனையில் நடந்தது.
அவருடன், துங்கு மக்கோத்தா இஸ்மாயில், துணைவியார் புவான் மக்கோத்தா கலீடா, துங்கு இஸ்கண்டார் (ஜொகூர் ராஜா மூபர் மற்றும் அவர்களின் குழந்தைகளும் பங்கேற்றனர். மேலும், துங்கு இத்ரிஸ், துங்கு அப்துல் ரஹ்மான், துங்கு அபு பாக்கர் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
வெப்பமான காலநிலை இருந்தபோதிலும், ஜொகூர் மக்கள் உற்சாகமாக பேரரசர் மற்றும் அரச குடும்பத்தினருடன் கைகுலுக்கி வாழ்த்துகளைப் பெற்றனர். பேரரசர் தனது மகிழ்ச்சியை வந்திருந்த பொதுமக்களிடம் பகிர்ந்து கொண்டார்
இதனிடையே ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி அவரின் மனைவியுடன் முதல் நாள் நோன்புப் பெருநாள் அன்று ஆயிரக்கணக்கான ஜொகூர் மக்களின் உற்சாக பங்கேற்பை பார்த்து மகிழ்ச்சி அடைந்ததாக கூறினார். பல இன மக்களின் பங்கேற்பு இந்த ஹரிராயாவை மேலும் அர்த்தமுள்ளதாக்குகிறது. என்றார்.
விருந்தினர்களுக்கு கெத்துபாட்ட லெமாங், புரசாக், லக்சா ஜொகூர், நாசி பிரியாணி, சாத்தே, கம்பிங் பக்கார் உள்ளிட்ட பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டன.ஏசாட் லாஸிம் மற்றும் ஷூரா ஆகியோர் பாடல்கள் பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். குழந்தைகளின் சிரிப்பும். மக்களின் சந்தோஷமும் ஒருங்கிணைந்த இந்த விருந்துபசரிப்பு உண்மையான ஹரிராயா கொண்டாட்டமாக அமைந்தது.
அதே வேளையில், ஜொகூர் காவல் துறை தலைவர் டத்தோ எம். குமார். அவரின் மனைவி டத்தின் சாந்தி ஆகியோர். காவல்துறை உறுப்பினர்களுக்காக ஹரிராயா நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.
இந்நிகழ்வு ஜொகூர் காவல்துறை தலைமையகத்தில் உள்ள துங்கு லக்ஸமணா அப்துல் ஜாலில் மசூதி மண்டபத்தில் நடைபெற்றது. இதில், SAC நோர் அசிசி, மாவட்ட காவல் துறைத் தலைவர்கள், பெர்கேப் உறுப்பினர்கள். உயர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும்
சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். விருந்தினர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து உணவுகளை பகிர்ந்து கொண்டதோடு, எவரிடமும் எந்த விதமான வேறுபாடுகளும் இல்லாமல், ஒன்றுபட்டு கொண்டாடிய இந்த ஹரிராயா நிகழ்வு அனைவருக்கும் இனிமையான அனுபவமாக அமைந்தது.
Sultan Ibrahim menghadiri rumah terbuka Hari Raya di Istana Johor bersama keluarga diraja, disertai rakyat yang gembira bersua baginda. Menteri Besar Johor turut hadir. Acara khas juga diadakan untuk anggota polis, mempererat perpaduan tanpa mengira perbezaan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *