வாகனத்தைக் கடலில் மூழ்கடித்த மாணவர்கள்!

- Sangeetha K Loganathan
- 04 Apr, 2025
ஏப்ரல் 4,
கடற்கரையில் சாகசம் செய்வதாக வாகனத்தைக் கடல்கரையில் சிக்க வைத்ததாக வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக Port Dickson மாவட்டத் துணைக் காவல் ஆணையர் Mohd Ruslan Mat Kib தெரிவித்தார். அதிகாலை 6 மணிக்குச் சம்மந்தப்பட்ட 7 வெளிநாட்டு மாணவர்களும் கடற்கரையில் வாகனத்தை வேண்டுமென்றே செலுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்மந்தப்பட்ட 7 மாணவர்களும் சூடான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் மலேசியாவில் உயர்கல்வியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் சிக்கிய வாகனம் இழுவை வாகனத்தின் மூலமாக காலை 9 மணிக்கு மீட்கப்பட்டதாகவும் சம்மந்தப்பட்ட வாகனம் வாடகை வாகனம் என்றும் Port Dickson மாவட்டத் துணைக் காவல் ஆணையர் Mohd Ruslan Mat Kib தெரிவித்தார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tujuh pelajar asing dari Sudan memandu sebuah kereta sewa ke kawasan pantai Port Dickson untuk berseronok sebelum kenderaan itu tersangkut dalam pasir. Kenderaan berjaya ditarik keluar pada jam 9 pagi dan siasatan lanjut sedang dijalankan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *