வணிகம் செய்ய வெளிநாட்டினர்களுக்கு அனுமதியில்லை! YB. S Veerapan வலியுறுத்து!

- Sangeetha K Loganathan
- 02 Apr, 2025
ஏப்ரல் 2,
நெகிரி செம்பிலானில் உள்ள Bandar Baru Nilai பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் வெளிநாட்டினரால் நடத்தப்பட்டு வந்த அங்காடிக் கடை மூடப்படுவதாக சிரம்பான் மாநகர மன்றம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டினர்கள் வணிகம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் இது போன்று சட்டவிரோதமாக வணிகம் செய்யும் வெளிநாட்டினர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் S Veerapan தெரிவித்தார்.
மலேசியர்கள் மட்டுமே வணிகக் கடைகளை நடத்த உரிமம் வழங்கப்படுவதாகவும் வெளிநாட்டினர்களால் வணிகக் கடைகள் நடத்தப்பட்டால் அருகிலுள்ள மாநகர மன்றத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கும்படியும் மாநில அதிகாரிகள் சம்மந்தப்பட்ட வணிகக் கடையில் சோதனையை மேற்கொள்வதைத் தாம் உறுதிச் செய்வதாகவும் S Veerapan நம்பிக்கை அளித்தார். வெளிநாட்டினர்கள் சட்டவிரோதமாக வணிகம் செய்வதால் உள்ளூர் வணிகர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக அவர் தெரிவித்தார்.
Pihak berkuasa di Negeri Sembilan telah menutup sebuah kedai runcit di Bandar Baru Nilai yang dikendalikan oleh warga asing. Ahli Majlis Mesyuarat Kerajaan Negeri, YB S. Veerapan, menegaskan bahawa hanya rakyat Malaysia dibenarkan berniaga dan tindakan tegas akan diambil terhadap perniagaan haram oleh warga asing.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *