Putra Heights வெடிப்புச் சம்பவம்! மடானி அரசின் தோல்வி!

- Sangeetha K Loganathan
- 03 Apr, 2025
ஏப்ரல் 3,
Putra Heights எரிவாயு குழாய் வெடிப்புச் சம்பவம் தொடர்பாகக் கையாளப்படும் அரசு நடவடிக்கைகளில் நம்பிக்கை இல்லை என எதிர்கட்சி தலைவரான Datuk Seri Hamzah Zainudin தெரிவித்தார். இந்த வெடிப்புச் சம்பவம் குறித்து அரசாங்கத்திற்குத் தெளிவு இல்லை என்றும் இயற்கை பேரிடர் போல இந்த வெடிப்புச் சம்பவத்தை எதிர்கொள்ளவது குறிப்பிட்டவர்களைப் பாதுகாக்கும் முயற்சியாகத் தாம் கருதுவதாகவும் Datuk Seri Hamzah Zainudin தெரிவித்தார்.
முன்னதாகப் பிரதமர் அன்வார் சம்மந்தப்பட்ட எரிவாயு குழாயின் உரிமையாளரான Petronas முறையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். அதனை அடுத்து சிலாங்கூர் மாநில மெந்திரி பெசார் AMIRUDIN SHARI மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்ட குத்தகை நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்! உண்மையில் இந்த வெடிப்புக்கு யார் தான் காரணம் என அரசாங்கத்திற்குத் தெரியவில்லையா, இல்லை, தெரிந்தும் குறிப்பிட்ட தரப்பினரை அரசாங்கம் திட்டமிட்டு மறைக்கிறதா எனும் கேள்வி தமக்குள் எழுவதாக Datuk Seri Hamzah Zainudin தெரிவித்தார்.
Datuk Seri Hamzah Zainudin mengkritik kerajaan atas pengendalian insiden letupan paip gas Putra Heights mendakwa kerajaan tidak jelas mengenai punca sebenar. Beliau mempersoalkan sama ada kerajaan sengaja melindungi pihak tertentu dalam insiden tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *