RM 77,600 மதிப்பிலானக் கடத்தல் பொருள்கள் பறிமுதல்!

- Sangeetha K Loganathan
- 01 Apr, 2025
ஏப்ரல் 1,
மலேசிய எல்லை பகுதியில் உள்ள Epek ஆற்றங்கரையிலிருந்து கைவிடப்பட்ட நிலையில் இருந்த 5 பெட்டிகளை எல்லை பாதுகாப்பு கடத்தல் சிறப்புப் பிரிவான PGA பறிமுதல் செய்தது. இரவு 10 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த PGA அதிகாரிகள் பெட்டிகளைப் பறிமுதல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட பெட்டிகளிலிருந்து 1050 முகம் கழுவும் சவக்காரங்களும் 461 தலை மைகளும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஒப்பனை பொருள்கள் தாய்லாந்தில் தயாரிக்கப்பட்டவை என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் ஒப்பனை பொருள்களின் மதிப்பு RM 77,600 ரிங்கிட் என கணக்கப்பட்டுள்ளது.
PGA merampas lima kotak barangan seludup bernilai RM 77,600 di tebing Sungai Epek. Barangan terdiri daripada 1,050 pencuci muka dan 461 alat solek dipercayai dari Thailand. Rampasan dilakukan ketika rondaan malam di kawasan sempadan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *