கைவிடப்பட்ட நிலையில் 150 கிலோ அரிசி மூட்டைகள்!

top-news

ஏப்ரல் 3,

மலேசிய எல்லை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் 150 கிலோ எடையிலான அரிசி மூட்டைகள் கிடைக்க பெற்றதாக எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவின் சிறப்புப் படை தெரிவித்துள்ளது. நேற்று இரவு சிறப்புப் படை அதிகாரிகள் Pengkalan Kubor சாலையில் ரோந்து பணியில் இருந்த போது ஆற்றங்கரை ஓரத்தில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து சியாம் பகுதியில் கொள்முதல் செய்யப்படும் அரிசி வகைகள் அது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 50 கிலோ எடையுள்ள Cap Pauh வகை அரிசி மூட்டைகளும் 100 கிலோ எடையுள்ள Cap Angsa Emas அரிசி மூட்டைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள Pengkalan Kubor காவல் நிலையத்தில் 150 கிலோ அரிசி மூட்டைகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pihak berkuasa menemui 150 kg guni beras yang ditinggalkan di tepi sungai kawasan sempadan Malaysia-Thailand. Beras tersebut dipercayai dari Thailand dan telah dirampas oleh pasukan khas penyeludupan sempadan di Pengkalan Kubor untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *