பினாங்கில் நோன்பு பெருநாளுக்கு பெருங்குவியலான குப்பைகளை இலவசமாக அகற்றும் சேவை!

- Muthu Kumar
- 18 Mar, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு, மார்ச் 18-
வரும் நோன்பு பெருநாள் தொடர்பில் பினாங்கு மாநிலத்தில் வழக்கத்திற்கும் மாறாக, பெருங் குவியல் கொண்ட குப்பைகளை இலவசமாக அகற்றும் பரிவுமிக்க பணியினை, மக்கள் நலன் கருதி,மாநில மாநகர் மன்றம் செயல்படுத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அவ்வண்ணம் வரும் மார்ச் 24ஆம் நாள் தொடங்கி 30ஆம் நாள் வரையில் பெருங் குவியல் கொண்ட குப்பைகளை இலவசமாகவே அகற்றும் சேவையை மாநில மாநகர் மன்றம் மேற்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாக, இந்த விவகாரம் தொடர்பில் நேற்று இங்கு நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் குப்பைகளை அகற்றும் பணிகள் நாள்தோறும் இரு முறை நடத்தப்படும் என்றும் பெருங் குவியல் குப்பைகள் தொடர்பில் பொது மக்கள் அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினர்கள் மாநகர் மன்றத்தின் பொதுச் சேவைத் துறையின் எண்கள் வாயிலாக தொடர்பு கொண்டு தகவலளிக்கலாமென்று கூறப்பட்டது.
நேற்று காலையில் இங்கிருக்கும் மாநகர் மன்றத்தின் மாநாட்டு அறையில் மாநகர் மன்ற உறுப்பினர்களுள் ஒருவரான ரோஹாய்ஸாட் ஹமீட் செய்தியாளர்களுடன் நடத்திய சந்திப்புக் கூட்டத்தில் இத்தகவல் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வழங்கினார். அப்போது இதர மாநகர் மன்ற உறுப்பினர்களான, தான் சூ சியாங், பெஞ்சி ஆங், ஜுராய்டா அர்ஷாத் மற்றும் ஷாகுல் ஹமீட் ஆகியோர் உடனிருந்தனர்.
Majlis Bandaraya Pulau Pinang akan menjalankan perkhidmatan khas pembuangan sampah secara percuma dari 24 hingga 30 Mac sempena Hari Raya Aidilfitri. Pembersihan dilakukan dua kali sehari, dan orang ramai boleh menghubungi jabatan perkhidmatan awam untuk maklumat lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *