அலோர் காஜா தமிழ்ப்பள்ளியில் மரம் நடும் திட்டம் இயற்கை வளத்தைப் பேண வித்திடும்!

- Muthu Kumar
- 02 Apr, 2025
(சங்கர் வேலு)
அலோர் காஜா, ஏப். 2 -
அலோர் காஜா தமிழ்ப்பள்ளி மற்றும் மலாக்கா சாய் பாபா அமைப்பினர் இணை ஏற்பாட்டில் பள்ளியின் வளாகத்தில் மரம் நடுதல் பசுமைத் திட்டம் இனிதே நடைபெற்றது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தனது வாழ் நாட்களில் ஒரு மரமாவது நட வேண்டும் எனும் விழிப்புணர்வை மேலோங்கச் செய்வதாகும் என அப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி ஆ.பார்வதி கூறினார்.
இத்திட்டம் மலாக்கா சாய் பாபா வழிகாட்டலில் மாணவர்களும் ஆசிரியர்களும் பங்கெடுத்து சிறப்பாக நடைபெற்றது. பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் மரங்களை நட்டனர். இந்நிகழ்வில் மலாக்கா மாநில கல்வி இலாகாவின் மாணவர் நலப்பிரிவின் துணை இயக்குநர் திருமநி அஸ்னா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் தமது உரையில் இத்திட்டம் அமல்படுத்துவதன் மூலம் மாணவர்கள் இயற்கை வளத்தைப் பேண முடியும் எனக் கற்றுக் கொள்வர் என்று கூறினார். இத்திட்டம் வழி நடத்துவதன் மூலம் மாணவர்கள் மரம் நடுவது அனைவரின் பொறுப்பு என அறிந்து கொள்வர்.
மேலும் மரங்கள் பிரணாவாயுவை வெளியிட்டுச் சுற்றுச் சூழலுக்குத் தூய்மையான காற்று வழங்குகிறது அத்துடன் பருவ நிலை மாற்றத்தில் மேம்பாடுக் காண உதவுகிறது அதுமட்டுமல்லாமல் மண்ணைப் பாதுகாக்கிறது மற்றும் வன விலங்குகளை ஆதரிக்கிறது என்று அறிந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மலாக்கா சாய்பாபா இயக்கத்தின் பொறுப்பாளர்கள். தலைமையாசிரியர் திருமதி பார்வதி,துணைத் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கச் செயலவை உறுப்பினர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், பள்ளிப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் இந்நிகழ்ச்சியின் வெற்றிக்குத் தோள் கொடுத்தனர்.
Sekolah Tamil Alor Gajah bersama Persatuan Sai Baba Melaka menganjurkan program penanaman pokok untuk meningkatkan kesedaran pelajar tentang kepentingan alam sekitar. Program ini disertai pelajar, guru, ibu bapa, dan pegawai pendidikan, menekankan manfaat pokok dalam mengekalkan keseimbangan ekologi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *