ராமாயணம் படத்தில் ராவணனாக நடிக்கும் KGF யாஷ் சம்பளம் 200 கோடியா?

- Muthu Kumar
- 25 Dec, 2024
'கே.ஜி.எஃப்' படங்களின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர், கன்னட நடிகர் யாஷ். இவர் கீது மோகன்தாஸ் இயக்கும் 'தி டாக்ஸிக்' படத்தில் இப்போது நடித்து வருகிறார்.இதில் நயன்தாரா, ஹுமா குரேஷி உட்பட பலர் நடிக்கின்றனர்.
இதையடுத்து நிதேஷ் திவாரி இயக்கும் 'ராமாயணம்' படத்தில் ராவணனாக நடித்து வருகிறார் kgf யாஷ். இதில் ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர். ரகுல் ப்ரீத் சிங், லாரா தத்தா, சன்னி தியோல் என பலர் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக இந்தப் படம் தயாராகிறது.
இதை, நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம், நடிகர் யாஷின் மான்ஸ்டர்மைண்ட் கிரியேஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது.இந்தப் படத்தில் நடிகர் யாஷின் சம்பளம், படத்தின் விநியோக பங்குடன் சேர்த்து ரூ.200 கோடி என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மை என்றால் இந்திய சினிமாவில் வில்லனாக நடிக்க அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்ற பெருமையை யாஷ் பெறுவார் என்கிறார்கள்.
இந்தியாவில் ஷாருக்கான் தவிர, அல்லு அர்ஜுன், ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் ஒரு படத்துக்கு ரூ.200 கோடிக்கு மேல் ஊதியம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *